×
 

இலங்கை -வங்கதேசத்துக்கு ரொட்டித் துண்டுகளை வீசிய சீனா… இந்தியாவிற்கு எதிராக தாவிக் குதிக்கும் அண்டை நாடுகள்..!

வங்கதேசத்துடனான உறவை மேம்படுத்தவும், பிரிட்டிஷ் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் சீனா தயாராக இருப்பதாகவும் துள்ளிக் குதிக்கிறார் முகமது யூனுஸ்.

வங்கதேசத்துடனான உறவை மேம்படுத்தவும், பிரிட்டிஷ் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் சீனா தயாராக இருப்பதாகவும் துள்ளிக் குதிக்கிறார் முகமது யூனுஸ்.

ஷேக் ஹசீனா வங்கதேசத்திலிருந்து வெளியேறிய பிறகு, சீனா தனது செல்வாக்கை வங்கதேசத்தில் வலுவாக்கத் தயாராகி வருகிறது. சீனா, வங்கதேசத்துடனான தனது உறவுகளை வலுப்படுத்தத் தயாராக இருப்பதாகக் கணைக்கிறது. வங்கதேசத்துடனான பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும், எல்லைகளை அதிகரிக்கும் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், மக்களிடையேயான பரிமாற்றங்களை விரிவுபடுத்தவும் பெய்ஜிங் தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் தெரிவித்தார்.

வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவு ஆலோசகரான தௌஹித் ஹுசைன் ஜனவரி 20 முதல் 24 வரை சீனாவுக்கு பயணம் செய்யவிருக்கும் நேரத்தில் சீனாவின் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: சீனாவில், வாடகைக்கு "போலி அலுவலகங்கள்" ; வேலை பார்ப்பது போல் 'நடிக்கும்' இளைஞர்களின் 'நூதன ட்ரெண்ட்'

"சீனாவும், வங்கதேசமும் பாரம்பரியமாக நட்பு அண்டை நாடுகள்.இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் மரியாதையுடனும், சமத்துவத்துடனும் நடத்தி, அவர்களின் முக்கிய நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து வருகிறோம். நாடுகளுக்கு இடையே நட்புறவான தொடர்பு, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கு நாம் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளோம்.
 
எப்போதும் போல, வங்கதேசத்துடனான தனது உறவுகளை மேம்படுத்துவதற்கு சீனா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.சீனா பல்வேறு மட்டங்களில் வங்கதேசத்துடனான நட்பை வலுப்படுத்தும். அரசியல் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தும். பிற துறைகளில் பரிமாற்றங்கள்,ஒத்துழைப்பை ஆழப்படுத்தும். சீனா-வங்கதேச விரிவான முக்கிய கூட்டுறவு கூட்டாண்மையை முன்னேற்றும். சீனாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவான 2025 ஆம் ஆண்டு, 'சீனா-வங்காளதேச மக்கள் பரிமாற்ற ஆண்டாக' கொண்டாடப்படும்''என்று அமோக ஆசை அறிக்கைகளை விட்டு இருக்கிறார் சீன செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன்.

அப்போது, ​​இந்த வாரம் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள் பயணம் குறித்த தகவல்களையும் குவோ ஜியாகுன் அறிவித்தார். திசாநாயக்கவிற்கும், ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான சந்திப்பில் விவசாய ஏற்றுமதிகள், மக்கள் நலன் தொடர்பான பல ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் ஏற்கெனவே கையெழுத்தாகி உள்ளதாகவும் குவோ ஜியாகுன் கூறினார். இம்மாதம் 14 முதல் 17 வரை சீனாவிற்கு போய் வந்தார் இலங்கை அதிபர் திசாநாயக்க.

இதையும் படிங்க: சீனா- பாகிஸ்தானை வியர்க்க வைக்கும்... இந்தியாவின் சோனாமார்க் சுரங்கப்பாதை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share