×
 

ஹீரோவாக அவதாரம் எடுக்கும் மாதம்பட்டி.. சமையலில் கலக்கியவர் மீண்டும் சினிமாவில் கலக்க வருகிறார்..!

மாதம்பட்டி ரங்கராஜன் நடித்து வெளிவர இருக்கும் படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை, எந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும் அங்கு முதல் ஆளாக நிற்பவர் மாதம்பட்டி ரங்கராஜன் தான். ஏனெனில் அவருக்கு அங்கு தான் வேலைகள் அதிகமாக இருக்கும். இன்று எப்படி பெரிய புள்ளிகள் அவர்களது வீட்டில் rolls-royce கார் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ.. அதேபோல் தங்கள் இல்ல நிகழ்ச்சிகள் என்றால் 'மாதம்பட்டி ரங்கராஜன்' சமையல இருக்க வேண்டும். அதுதான் நம்முடைய 'பிராண்ட்'என்று கூறுகின்றனர். அந்த அளவிற்கு இன்று வளர்ந்து நிற்கிறார்.

இப்படி இருக்க, மாதப்பட்டி ரங்கராஜன் படங்களில் ஹீரோவாக வலம் வரவில்லை என்றாலும் தான் கையில் எடுத்த சமையல் துறையில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குக் வித் கோமாளி" என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் இவர், டைமிங் காமெடி செய்வதுடன் நடுவராகவும் தனது தனித்துவத்தை காமித்து வருகிறார். இன்று சின்னத்திரை வட்டார நிகழ்ச்சிகளில் சிறந்த நடுவர் என்றால் அது மாதம்பட்டி ரங்கராஜன் தான் என்ற பெயரும் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: பெண் மீது காதல் வயப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜ்... உண்மையை உடைத்த அவரது மனைவி.. இனி அவ்வளவுதான்...!

இன்று சமையலில் வெளுத்து வாங்கும் மாதம்பட்டி ரங்கராஜ், குக்கூ படத்தின் இயக்குனரான ராஜமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த "மெஹந்தி சர்க்கஸ்" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். இப்படம் பெரிதளவில் வெற்றியை தேடி தந்தது என்றாலும் ரங்கராஜன் நடிப்பு பலரால் பேசப்பட்டது. அதன் பின் மீண்டும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்தால் ரங்கராஜன் தனது குடும்பத்தின் தொழிலான சமைக்கும் தொழிலை கையில் எடுத்து, இன்று சமையலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். அதுவரை ரங்கராஜன் என்று அழைத்தவர்கள் காலப்போக்கில் மாதம்பட்டி ரங்கராஜன் என அழைக்க தொடங்கினர். எப்படி செட்டிநாடு சமையல் என்கின்றோமோ அதே போல் தற்பொழுது மாதம்பட்டி சமையல் என மாற்றி வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜனின் முதல் பட வெற்றிக்கு காரணமான இயக்குநர் ராஜூ சரவணனுடன் மீண்டும் கூட்டணி வைத்து தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார் மாதம்பட்டி. கடந்த டிசம்பரில் தொடங்கிய இப்படப்பிடிப்பு பாலக்கோடு , தர்மபுரி மற்றும் அதன் சுற்றுப்புற மலைப் பகுதிகள் மற்றும் தர்மபுரியிலும் படமாக்கப்பட்டு தற்பொழுது நிறைவடைந்துள்ளது.

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. எனவே படத்தின் டிரெய்லர் மற்றும் படம் வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: பெண் மீது காதல் வயப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜ்... உண்மையை உடைத்த அவரது மனைவி.. இனி அவ்வளவுதான்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share