பாத்ரூம் கழுவி நடிகையை நடிக்க வைத்த இயக்குநர்.. எத்தனை பேருக்கு தெரியும் இந்த சம்பவம்...!
ஓ மை கடவுளே மற்றும் டிராகன் படத்தை இயக்கி தற்பொழுது வெற்றி கண்டுள்ள அஷ்வத் மாரிமுத்து நடிகைக்காக பாத்ரூம் கழுவினார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரதீப் ரங்கநாதனின் கரியரில், டிராகன் படம் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு அஷ்வத் மாரிமுத்துவுக்கும் மிகவும் பொக்கிஷமான படம். ஏனெனில் "ஓ மாய் கடவுளே" படத்திற்கு கிடைத்த பலமான வரவேற்பை காட்டிலும் பல மடங்கு அதிகமாகியுள்ளது "டிராகன்" படத்தின் இயக்கமும் காட்சிகளும். இப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் அஷ்வினை பாராட்டி வருவதுடன், சினிமா பிரபலங்கள், இயக்குனர்கள் என அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார்.
பல விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியான இப்படம் பயங்கரமான ஹிட் கொடுத்து தற்பொழுது ரூ.130 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனால், டிராகன் படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது, பேசிய இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து, தான் இயக்கிய "ஓ மை கடவுளே' படம் வெளியான போது, நடிகர் மகேஷ்பாபு அப்படத்தை பார்த்து, பாராட்டி ஒரு டவிட் போட்டார். அதனை பார்த்த தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் அப்படத்தை பார்த்து கொண்டாடினர், அதேபோல், 'டிராகன்' படத்தையும் அவர் பார்க்க வேண்டும். நிச்சயமாக இந்த படமும் அவருக்கு பிடிக்கும் என நம்புகிறேன்" என்று உணர்ச்சி போங்க பேசி இருந்தார். இப்படி இருக்க, வருகின்ற மார்ச் -21ம் தேதி டிராகன் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ... கைதி, விக்ரம் படங்களை டீலில் விட்டாரா இயக்குனர்..?
இந்த நிலையில், அஷ்வத் மாரிமுத்து குறித்து நடிகர் அசோக் செல்வன் கூறிய சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, "ஓ மை கடவுளே" படத்தின் இயக்குனரான அஸ்வத் மாரிமுத்து அப்படத்தை எடுப்பதில் அயராது உழைத்தார். அப்படி இருக்கும் பொழுது படப்பிடிப்பின் வேளையில் சாதாரணமான சிறிய ஹோட்டலில் நாங்கள் அனைவரும் தங்கினோம். அங்கு டாய்லெட் சுத்தமாக இல்லை என்பதால் நடிகை ரித்திகா 'டாய்லெட்' போக முடியாமல் கஷ்டப்பட்டார்.
இதனை சரிசெய்ய, ஹோட்டலில் ரூம் பாயும் அப்போது இல்லை. இதனால் அவர்களது நிலைமையை உணர்ந்து, அஷ்வத் மாரிமுத்து தானே அந்த டாய்லெட்டையும் பாத்ரூம் முழுவதையும் சுத்தம் செய்து கொடுத்தார். இப்படி எத்தனை பேர் செய்வார்கள் என தெரியவில்லை, ஒருவேளை அவர் நினைத்திருந்தால் அவரது உதவி இயக்குநர்களையோ, வேறு யாரிடமாவது அந்த வேலையை செய்ய சொல்லி இருந்திருக்கலாம். ஆனால் அவரே செய்தது தான் ஆச்சரியம். இந்த மனப்பான்மை தான் அவரை உயர்த்தி உள்ளது என்று கூறினார்.
இதனை பார்த்த அஷ்வத் ரசிகர்கள், தங்கள் மீது வைத்த மதிப்பு இந்த பதிவை பார்த்தவுடன் மேலும் அதிகரித்துள்ளதாக கூறி அஷ்வினை பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: தோல்வியை பாராத இயக்குநரின் அடுத்த படம் சிவகாத்திகேயனுடன்.. விஜயை வைத்து மாஸானவர் தற்போது skவை வைத்து என்ன ஆக போகிறாரோ..!