ஜாதி கட்சியா இது? - எல்.முருகன் முன்பே மல்லுக்கட்டிய பாஜகவினர் - நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களால் அதகளம்!
மாவட்ட நிர்வாகிகள் நியமன கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையிலேயே பாஜகவினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட நிர்வாகிகள் நியமன கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையிலேயே பாஜகவினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் தனியார் மண்டபம் ஒன்றில், தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீண்டும் தெற்கு மாவட்ட தலைவராக ஜெய் சதீஷ் அறிவிக்கப்பட்டார். இதற்கு பார்வையாளர்கள் வரிசையில் இருந்த கதிரவன், துரைமுருகன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையிலேயே கடும் வாக்குவாதத்தில் இறங்கினர்.
மற்றொருபுறம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவராக மீண்டும் அஸ்வின் குமார் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் பாஜக மாவட்ட செயலாளர் சுமதி வெங்கடேசனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இம்மாவட்டத்தில் தொடர்ந்து தலைவர் பதவி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டினர். அத்துடன் “ஜாதி கட்சியா நடத்துறீங்க? பாஜக ஒரு ஜாதி கட்சி..” என்றெல்லாம் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: திமுக ஒரு நாடக கம்பெனி.. கருணாநிதியை மிஞ்சும் திரைக்கதை.. திமுக அரசை டாராகக் கிழித்த அண்ணாமலை!
இந்த இரண்டு பிரச்சனைகளையும் விட, நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களுக்கே தென்மாவட்ட கட்சி பதவிகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக பூதாகரமான பிரச்சனை வெடித்துக்கிளம்பியுள்ளது. திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவராக முத்து பழவேசம், தெற்கு மாவட்ட தலைவராக எஸ்.பி. தமிழ்ச்செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நெல்லை மாவட்ட பொதுச்செயலாளர் பதவியையும் தன்னுடைய மகன் பாலாஜிக்கு கொடுக்க உள்ளதாக தகவல்கள் எழுந்துள்ளது. இது நெல்லை பாஜகவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில், நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களின் பெயர்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுவதாக கூறி, நெல்லை வடக்கு மாவட்ட செயலாளர் தயாசங்கர், பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம் ஆகியோர் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
பாஜகவின் வேலூர் மாவட்ட புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தசரதனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கூண்டோடு பதவி விலகுவதாக மாநில பொறுப்பாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் கட்சிக்காக உண்மைக்காக உழைத்தவர்களுக்கும், தொண்டர்களின் எண்ணித்திற்கும் எதிரான நியமனத்தில் உடன்பாடு இல்லாததால் மிகுந்த மன வருத்தத்துடன் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளது பாஜகவில் தீவிர உட்கட்சி பூசல் வெடித்துள்ளதைக் காட்டியுள்ளது.
இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கு.. 750 நாட்கள் கப்சிப்.. 3 நாளில் எப்படி முடிச்சீங்க..சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை!