×
 

திமுக - மத்திய அரசு மோதல்..! ‘மொழி மதச்சார்பின்மையை ஆதரித்த உச்சநீதிமன்றம்’.. ஓர் பார்வை..!

மும்மொழிக் கொள்கையா அல்லது இருமொழிக் கொள்கையா என்ற விவாதம் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே வலுத்து வரும் நிலையில் மொழி சார்பின்மையை உச்ச நீதிமன்றம் கடந்த கால தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையை மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கு நிதியுதவி செய்யப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்து தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தேசியக் கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியை மத்திய அரசு திணிக்க முயல்கிறது, கல்வியில் தமிழகத்தின் வளர்ச்சியை அழிக்கும் செயல் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மும்மொழிக் கொள்கை, இருமொழிக்கொள்கை விவகாரம் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே பெரிய விவாதப் போராக எழுந்துள்ள நிலையில் கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் மொழியைப் பற்றி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: செங்கோட்டையன் உடன் அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை.. இபிஎஸ் மீதான அதிருப்தியை சரிக்கட்ட முயற்சி..!

2014ம் ஆண்டு, உத்தரப்பிரதேசத்தின் இந்தி சாஹித்யா சம்மேளன் மற்றும் உ.பி.அரசுக்கும் இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் “தேசத்தில் சட்டம் மற்றும் மொழியின் வளர்ச்சி, மேம்பாடு இயல்பாக இருக்க வேண்டும். இந்த மொழிச் சட்டங்கள் கடுமையானவை அல்ல, இணக்கமானவை. மொழி மதச்சார்பின்மையை உறுதிசெய்வதே இதன் நோக்கம்” எனத் தெரிவித்தது.

216 இந்திய சட்ட ஆணையம் அறிக்கையை சட்டத்துறை அமைச்சருக்கு அனுப்பியது. அதில் “உச்ச நீதிமன்றத்தில் கட்டாயமொழியாக்குவது சாத்தியமானது அல்ல” எனத் தெரிவித்தார். தலைவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் கூறுகையில் “மொழி என்பது எந்த தேசத்தின் குடிமக்களுக்கும் உணர்வுப்பூர்வமான விஷயம். மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைக்கும் அம்சம் மொழி, தேசத்தை ஒருங்கிணைக்கும் சக்திவாய்ந்த ஆயுதம். எந்தவொரு மொழியும் எந்தவொரு பிரிவினரின் மீதும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக திணிக்கப்படக்கூடாது, ஏனெனில் அது எதிர் விளைவை ஏற்படுத்தும்” என எச்சரித்தார்.

இந்தி 'தேசிய மொழி' என்ற கேள்வி தொடர்பாக 1949 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சபையில் மோதல் எழுந்தது. அது குறித்து அரசியலமைப்பு நிபுணர் எச்.எம். சீர்வாய் எழுதிய விளக்கத்தை நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டது.

சீர்வாய் கூறுகையில் “இந்தி அலுவல் மொழியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், இதை தேசிய மொழியாக விவரிக்க முடியாது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இந்தி பேசப்படும் மொழி அல்ல. இந்தி மொழியை மிகப்பெரிய அளவிலான ஒரு குழுவினர் பேசுகிறார்கள்., ஆனால், அந்த குழுவினர்தான் இந்தியாவின் பெரும்பகுதியினர் என அர்த்தம் அல்ல. 

பல்வேறு பிராந்திய மொழிகளான மேற்கு வங்கத்தில் வங்காளி, மதராஸில்(தமிழகம்)தமிழ், மராத்தி, குஜராத்தி என பெரும்பகுதி மக்கள் பேசுகிறார்கள். இந்த மொழிகள் இந்தியைவிட மேம்பட்டவை. ஆதலால் இந்தியை அலுவல் மொழியாக்கப்பட்டது” எனத் தெரிவித்தார். 

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ண அய்யர், சட்ட ஆணையத்திடம் தனது குறிப்பில் கூறுகையில் “ எனக்கு தனிப்பட்ட முறையில் இந்தியை விரும்புவேன். ஆனால், கட்டாயம் என்ற ரீதியில் இந்தியை எதிர்ப்பேன். மொழியியல் சர்வாதிகாரம் அந்நியப்படுத்தப்பட்டு பிரிக்கப்படும், ஆனால் கூட்டாட்சி பன்மைத்துவம் ஜனநாயக உணர்ச்சி கொண்டது” எனக் குறிப்பிட்டார்.

அரசியலமைப்புப் பிரிவு 351ன்படி மத்திய அரசு இந்தி மொழியைப் பரப்ப வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும் என்பது கடமை என்றது. இது குறித்து சுனில் கே.ஆர். சுகாஸ்தரபுத்தே, கான்பூர் ஐஐடி இயக்குநருக்கும் இடையிலான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 1982ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

அதில் “ இந்தி என்பது தேசிய மொழியாக இருந்தாலும், அரசியலமைப்புப் பிரிவு 351ன்படி இந்தி மொழியை பரப்பவும், ஊக்குவிக்கவும், வளர்க்கவும் மத்திய அரசுக்கு கடமை இருக்கிறது. இந்தி மொழி என்பது தேசத்தின் கூட்டு கலாச்சாரத்தின் அனைத்து கூறுகளும் தங்களை வெளிப்படுத்த ஒர் ஊடகமாக இருக்கும். அதேநேரம், ஒரு குறிப்பிட்ட மொழியில் கல்வி கற்பிக்க ஒரு நிறுவனத்தை கட்டாயப்படுத்த ஒருவருக்கும் உரிமை இல்லை” எனத் தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டம் 29(1) ன்படி, உச்ச நீதிமன்றத்தின் கருத்தின்படி, “ சமூகத்தின் ஒவ்வொரு பிரிவு மக்களும் பிரத்யேக மொழி, கலாச்சாரம் வைத்துள்ளனர், அதை பாதுகாக்க அவர்களுக்கு அடிப்படை உரிமை இருக்கிறது. இது பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களுக்கும் சமமான உரிமை” எனத் தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசுக்கும், தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக் கூட்டமைப்பு இடையே கல்விகற்றல் மொழியைத் தேர்ந்தெடுத்தல் குறித்து வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மொழி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பில் “ அரசியலமைப்புச் சட்டம் பிரிவு19ன் கீழ் பேச்சு மற்றும் கருத்துரிமை என்பது அடிப்படை உரிமை. ஆதலால் தொடக்கப்பள்ளி மாணவர்கள் அவர்கள் கற்கும் மொழியைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கிறது. இதில் கர்நாடக அரசு இந்த வாய்ப்பைக் கட்டுப்படுத்த முடியாது”எனத் தெரிவித்தது
 

இதையும் படிங்க: ரத்தம் சொட்ட சொட்ட மோதிக்கொண்ட இளைஞர்கள்.. போர்க்களமான மயானக் கொள்ளை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share