தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த மருத்துவர்..! முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்..!
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் படுகாயம் அடைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பரமேஸ்வரனிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரன் என்பவர், வயிற்றில் குண்டு பட்டு படுகாயம் அடைந்தார். காயமடைந்த பரமேஸ்வரனுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக அவர் அனந்த்நாக் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து பரமேஸ்வரன் ஸ்ரீநகரில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தாக்குதலில் காயமடைந்த பரமேஸ்வரனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். மேலும் அவரது மனைவியிடம் பேசிய முதலமைச்சர் ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: காஷ்மீருக்கு யாரும் போக வேண்டாம்.. தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!!
இதையும் படிங்க: கலிமா ஓத தெரியல சொன்னவங்கள சுட்டுடாங்க..! சம்பவத்தை நேரில் பார்த்த சிறுவன்..!.