×
 

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ துரித நடவடிக்கை..! பேரவையில் முதல்வர் உறுதி..!

பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிப்படக் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இன்று தமிழக சட்டப்பேரவை கூடியவுடன் பகல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். அப்போது, பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்தார். 

மேலும், பயங்கரவாத செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், பொதுமக்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், காஷ்மீர் அரசோடு தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இரக்கமற்ற முறையில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர்., டெல்லியில் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்து உத்தரவிட்டு உள்ளதாக கூறினார். 

இதையும் படிங்க: ரூ.2,158 கோடியை தமிழகத்திற்கு விடுவிப்பீங்களா? மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் இது போன்ற தாக்குதல்கள் வன்மையான கண்டனத்திற்கு உரியது என்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் துணை ஆட்சியர் அப்தாப் ரஸூலை சம்பவ இடத்திற்கு செல்ல உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலினுடன் எம்.ஏ.பேபி சந்திப்பு..! புதிதாக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share