×
 

மாற்றுத்திறனாளிகளுக்கு இரு மடங்கு நிதி..! சட்ட முன்வடிவை முன்மொழிந்தார் முதலமைச்சர்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிதி இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். இப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்தினார். அவர் பேசியதாவது, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.67 கோடியாக இருந்த நிதி தற்போது ரூ.1,432 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. குரலற்றவர்களின் குரலாக இருக்கிறது திமுக அரசு. 

மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லைக் கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. 493 மாற்றத்திறனாளிகளுக்கு அரசு பணிகள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் உரிமையை உறுதி செய்துள்ளோம். 

இதையும் படிங்க: அடுத்த முறையும் ஸ்டாலின் தான் CM... அடித்து சொல்லும் அமைச்சர்..!

மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் உரிமையை நிலைநாட்ட அரசு உறுதி பூண்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட முன்வடிவுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக நிதி தருவதில் தமிழகம் தான் முதலிடம்., உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினர் பதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதல்முறையாக சட்டசபையில் நயினார் நாகேந்திரன்.. சபாநாயகர், எம்எல்ஏக்கள் வாழ்த்து மழை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share