வகுப்பறையில் மாணவனை மணந்த கல்லூரி பேராசிரியை; 'வீடியோ வைரல்' இறுதியில் நடந்த 'டுவிஸ்ட்'; விசாரணை நடத்த முதல்வர் மம்தா உத்தரவு
இன்றைய காலகட்டத்தில் காதல், திருமணம் செய்வதற்கு வயதைஒரு பிரச்சினையாக யாரும் பார்ப்பதில்லை. மாணவர்கள், ஆசிரியைகளையும் மாணவிகள் பேராசிரியர்களையும் காதலித்து திருமணம் செய்வது சகஜமாக நடந்து வருகிறது.
மேற்கு வங்காள மாநிலத்தில் பல்கலைக்கழக வகுப்பறையிலேயே பேராசிரியை ஒருவர் முதல் ஆண்டு படிக்கும் தனது மாணவனை திருமணம் செய்து கொண்ட வீடியோ வெளியானது தான் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மாநிலத்தின் நாடியா மாவட்டம் ஹரிங்கடா பகுதியில் இருக்கும் அபுல் கலாம் ஆசாத் பல்கலைக்கழகத்தில் இந்த திருமணம் நடைபெற்று இருக்கிறது. அந்த வீடியோவில் அவர்கள் இருவரும் மணமக்கள் போல் அலங்காரம் செய்து கொண்டு, ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் அந்த பேராசிரியைக்கு மாணவர் குங்குமம் வைத்து, இந்து வங்காள முறைப்படி உரிய சடங்குகளுடன் திருமணம் நடந்து முடிந்தது.
ஆனால், சிறிது நேரத்தில் அந்த திருமண காட்சி வீடியோ மாநில முழுவதும் தீயாக பரவியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இது குறித்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் குழு ஒன்றை நியமித்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. விசாரணை முடிந்து அறிக்கை அரசிடம் கொடுக்கப்படும் வரை அந்த பேராசிரியை கல்லூரிக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார். அதேபோல் 'மணமகன்' மாணவரும் மறு உத்தரவு வரும் வரை வகுப்புக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார். இதற்கிடையில் வெளியான முக்கிய திருப்பம் (டுவிஸ்ட்) என்னவென்றால், இந்த திருமண நிகழ்வு தங்களுடைய பாடத்திட்டத்தின் ஒரு பகுதி என்று மாணவர்கள் தரப்பிலும் ஆசிரியர் தரப்பிலும் சொல்லப்படுவது தான்.
இதையும் படிங்க: கேரள சாமியார் 'ஜீவசமாதி'யில் சந்தேகம் உடலை தோண்டி எடுத்து, போலீசார் விசாரணை
முதல் ஆண்டு புதிதாக சேர்ந்திருக்கும் மாணவர்களை வரவேற்று விருந்து அளிக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டதாகவும், அதற்காக தயாரிக்கப்பட்ட நாடகத் திருமணம் தான் அது என்றும் அவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதே விளக்கத்தை சொன்ன அந்த பேராசிரியையும், "தனக்கு எதிராக நடத்தப்பட்ட சதியின் ஒரு பகுதி தான் இந்த வீடியோ வெளியிடப்பட்டது. எனக்கு அவதூறு ஏற்படுத்தி களங்கம் விளைவிக்கும் வகையில், இதை யாரோ திட்டமிட்டு செய்திருக்கிறார்கள்"என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.
இது இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பு வகித்து வரும் தபஸ் சக்கரவர்த்தி கூறுகையில், "சம்பந்தப்பட்ட அந்த பேராசிரியர் எந்தவிதமான ஒழுக்கக்கேடான விஷயத்திலும் ஈடுபடவில்லை. அது முற்றிலும் பாடம் சார்ந்து நடத்தப்பட்ட நிகழ்வு" என கூறினார். எனினும் வீடியோ வைரலாகி சர்ச்சை எழுந்ததால் குழுவின் விசாரணை முடிவடைந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை அவரை பணிக்கு வர வேண்டாம் என்று விடுமுறை எடுத்துக் கொள்ளும்படி கூறியிருக்கிறோம். அதேபோல் அந்த மாணவரையும் வகுப்புக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறோம் "என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இங்கிலாந்து இளம் பெண்களிடம் அத்து மீறியது ஆசியர்கள் அல்ல பாகிஸ்தானியர் தான்..!இந்திய எம்பி திட்டவட்டம்..எலன் மஸ்க் ஆதரவு