'திமுக ஆட்சிக்கு இது அசிங்கம்…' நடிகை விவகாரத்தில் சீமானுக்கு அன்புமணி ஆதரவு..!
அரசியல் கட்சித் தலைவர்களை துன்புறுத்துவது, பொய் வழக்குகள் போடுவது என கவனம் செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
''திமுக அரசின் காவல்துறை தமிழ்நாட்டின் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்காமல் தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டு துன்புறுத்துகிறது'' என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்குள் புகுந்து காவலாளி, உதவியாளர் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ''
திமுக அரசின் காவல்துறை தமிழ்நாட்டின் சட்டம் -ஒழுங்கை பாதுகாக்காமல் தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டு துன்புறுத்துகிறது.
இதையும் படிங்க: துப்புக்கெட்ட நாயே சீமான்... உன்னுடன் படுத்தது எனக்குத்தான் கேவலம்..! வெளுத்து வாங்கிய விஜயலெட்சுமி..!
காவல்துறையினர் தன் வேலைகளை விட்டுவிட்டு, தன் வேலையில் என்றால் என்ன சட்டம் -ஒழுங்கை பாதுகாப்பது... கஞ்சாவை ஒழிப்பது. இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாமல், அரசியல் கட்சித் தலைவர்களை துன்புறுத்துவது, பொய் வழக்குகள் போடுவது என கவனம் செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கடந்த கடந்த மாதத்தில் மட்டும் எத்தனையோ பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆறு பேர் சேர்ந்து பலாத்காரம், ஐந்து பேர், மூன்று பேர்…. கல்லூரியில், பள்ளியில், குழந்தைகள், ஐந்து வயது... ஏழு வயது... எட்டு வயது... கேட்டால் காவல்துறையினர் இது தனிப்பட்ட சம்பவம். நாங்கள் அங்கே போய் எப்படி இருக்க முடியும்? என்று கேட்கிறார்கள். சொல்வதற்கே அசிங்கமாக இருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வக்கிரவாதி சீமானுக்கு இனியும் வக்காலத்து வாங்குவீங்களா?... நாதக பெண் நிர்வாகிகளை உசுப்பேற்றும் சுதா எம்.பி...!