×
 

உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த பாஜக எம்.பி.க்கள் மீது ஏன் நடவடிக்கையில்லை..? காங்கிரஸ் கேள்வி..!

உச்ச நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்த பாஜக எம்.பி.க்கள் மீது பாஜக தலைமையிடம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்த பாஜக எம்.பி.க்கள் மீது பாஜக தலைமையிடம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, அதிலிருந்து தனித்து ஒதுங்கிக்கொண்டது என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றமே சட்டம் இயற்றினால் நாடாளுமன்றம் எதற்காக இருக்கிறது அதை இழுத்து மூடுங்கல் என்று ஜார்க்கண்ட் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடுமையாக உச்ச நீதிமன்றத்தை விமர்சித்துள்ளார். உ.பியின் துணை முதல்வர் ஷர்மா பேசுகையில் “நாடாளுமன்றத்துக்கோ அல்லது குடியரசுத் தலைவருக்கோ யாரும் உத்தரவிட முடியாது” என தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க: ‘உச்ச நீதிமன்றமே சட்டம் இயற்றினால், நாடாளுமன்றம் எதுக்கு இழுத்து மூடுங்க’.. பாஜக எம்.பி. கடும் விமர்சனம்..!

ஆனால் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா கூறிய கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்து, பாஜகவுக்கும் இவர்களின் கருத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா தெரிவித்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த பாஜக தலைவர்கள் மீது ஏன் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ பாஜகவின் இரு எம்.பிக்கள் உச்ச நீதிமன்றம், தலைமை நீதிபதி குறித்து பேசிய கொடுரமான கருத்துக்களில் இருந்து  பாஜக தலைவர் ஏன் ஒதுங்கிக்கொண்டார். 

இந்த எம்.பி.க்கள் தொடர்ந்து இதுபோன்ற பேசக்கூடியவர்கள். வெறுப்புப் பேச்சு என்றாலே குறிப்பிட்ட சமூகம், நிறுவனம், தனிநபர்களை கடுமையாக விமர்சிக்கக்கூடியவர்கள். பதவி விலகும் பாஜக தலைவரின் விளக்கம் சேததைக் குறைக்குமே தவிர வேறில்லை. இது யாரையும் முட்டாளாக்காது. இது முழு அரசியல் அறிவியலும் முழு அரசியல் போலித்தனத்தை பிரதிபலிக்கிறது.

ஆனால்,  நீதித்துறையைப் பற்றி ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளைக் கேட்டும் உயர் அரசியலமைப்பு பதவியில் நியமிக்கப்பட்ட மிகவும் புகழ்பெற்றவர்களில் ஒருவரைப் பற்றி  தொடர்ந்து விமர்சிக்கும்போது பாஜக தேசியத் தலைவர் அமைதியாக இருக்கிறார். அந்தக் கருத்துகளை பற்றி பாஜக என்ன நினைக்கிறது, ஏற்றுக்கொள்கிறதா.

இந்திய அரசியலமைப்பின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காக்கிறார். அந்தக் கருத்துக்களை பிரதமர் ஆதரக்கவில்லை என்றால், இந்த இரு எம்.பி.க்கள் மீதும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? இரு எம்.பி.க்களுக்கும் பாஜக தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதா?

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அரசியலமைப்புச் சட்டம் 142 (Article 142) என்றால் என்ன? உச்ச நீதிமன்றத்தை ஜெகதீப் தனகர் ஏன் கேள்வி எழுப்பினார்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share