காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம்.. குஜராத்தில் 8,9 தேதிகளில் நடக்கிறது..!
அமதாபாத் நகரில் வரும் 8,9 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நடக்க இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் கட்சியின் அதிகாரமிக்க காரியக் கமிட்டிக் கூட்டம் குஜராத்தின் அமதாபாத் நகரில் வரும் 8 மற்றும் 9 தேதிகளில் நடக்க இருக்கிறது. அமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் தேசிய நினைவிடத்திலும், மகாத்மா காந்தி சபர்மதி ஆசிரமத்திலும் இருநாட்கள் காங்கிஸ் கட்சியின் காரியக்கமிட்டிக் கூட்டம் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் குஜராத் காங்கிரஸ் கட்சியின் நிலை, அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பூட்டிய வீட்டில் கிலோ கணக்கில் தங்கம்.. ரூ.100 கோடி மதிப்பிலான நகை, பணம் பறிமுதல்.. துபாய் முதலீட்டாளருக்கு வலை..!
காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் “ஏப்ரல் 8 மற்றும் 9ம் தேதிகளில் காங்கிஸ் கட்சியின் காரியக்கமிட்டிக் கூட்டம் ஆமதாபாத்தில் நடக்கிறது. சர்தார் படேல் நினைவரங்கத்தில் நடக்கும் இந்தக் கூட்டம் என்பது சர்தாரின் மரபை மீட்டெடுக்கும் காங்கிரசின் முயற்சியாக இருக்கும் என வெளியே பேசினாலும் அது தவறு. 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. அதன்பின் இப்போது நடக்க இருக்கிறது. இந்த நினைவரங்கம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தின்ஷா படேல் என்பரால் நிர்வகிக்கப்படுகிறது.
ஏப்ரல் 8ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர், முக்கிய நிர்வாகிகள், அனைவரும் சபர்மதி ஆசிரமத்தில் கூடுகிறோம். இங்குதான் 1917 முதல் 1930 வரை சுதந்திர போராட்ட இயக்கம் வலுப்பெற்றது. சபர்மதி ஆற்றங்கரையில் ஏப்ரல் 9ம் தேதி முழுவதும் செயற்குழுக்கூட்டம் நடக்கும்” எனத் தெரிவித்தார்.
2027ம் ஆண்டு குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும், புத்துணர்ச்சியை தொண்டர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே காரியக் கமிட்டிக் கூட்டத்தை அமதாபாத்தில் நடத்துகிறது.
குஜராத்தில் 1955ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ஆனால், 1998ம் ஆண்டிலிருந்து பாஜக ஆட்சியைப் பிடித்தபின் காங்கிரஸ் கட்சியை பூண்டோடு ஒழித்துவிட்டு, ஏறக்குறைய 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐயோ கடவுளே... இவ்வளவா..? புரோக்கரிடம் இருந்து மீட்கப்பட்ட 100 கிலோ தங்கம்..!