குல்லா போடும் ஆள் நான் இல்லை… விஜய்யை பங்கமாக கலாய்த்த கூல் சுரேஷ்!!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை நடிகர் கூல் சுரேஷ் கலாய்த்துள்ளது விஜய் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.
கூல் சுரேஷ் படங்களில் நடித்து பிரபலமானதை விட பேட்டிகளிம் மூலம் பிரபலமானவர் என்று சொல்லலாம். இவர் தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும் அதில் அவருக்கு கிடைக்காத வரவேற்பு அவரது பேட்டிக்கு கிடைத்தது. சிம்புவின் வெந்து தனிந்தது காடு படத்திற்கு அவர் செய்த விளம்பரம், அவர் கொடுத்த பேட்டி மக்களிடையே பெரிய அளவில் ரீச் ஆனாது. அவரது வசனமான வெந்து தனிந்தது காடு; சிம்புவுக்கு வணக்கத்த போடு அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது, இதற்கு பிறகு அவர் மற்ற படங்களுக்கும் புரோமோஷன் செய்ய தொடங்கிவிட்டார். அவ்வாறு மன்சூர் அலிகான் ஹீரோவாக நடித்த சரக்கு என்னும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், இங்கு எல்லோருக்கும் மாலை போட்ட்டாங்க. ஆனால் ஒருத்தவங்களை மறந்துட்டாங்க. நம்மை வரவேற்பதற்காக விதவிதமான வார்த்தைகளை கண்டுபிடித்து பேசிய தொகுப்பாளினிக்கு யாராச்சும் மாலை போட்டீங்களா என கேட்டு அந்த தொகுப்பாளினிக்கு திடீரென மாலை போட்டார். இதனால் கடுப்பான அந்த தொகுப்பாளினி மாலையை கழட்டி வீசினார். கூல் சுரேஷின் இந்த செயலால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது பெரும் சர்ச்சையானது. இதை அடுத்து அவர் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: நடிகர் விஜயின் படத்தில் மூன்று இயக்குனர்கள்... அப்பட்டமாக வெளியே வந்த ரகசியம்..!
இதுக்குறித்த அவர் வெளியிட்ட வீடியோவில், சரக்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் சில அசம்பாவிதம் நடந்துவிட்டது. அந்த தொகுப்பாளினிக்கு மாலை போட்டேன். ஆனால் பெண்ணுக்கு மாலை போடக்கூடாதாம். கலகலப்பாக இருக்க வேண்டும் என்றுதான் செயல்படுவேன். அப்படித்தான் அப்போதும் விளையாட்டுத்தனமாக செய்தேன். விபரீதமாகிவிட்டது என்றார். இவ்வாறாக அவ்வப்போது அவரது பேச்சாலும் செயல்களாலும் பல சர்ச்சைகளில் சிக்கி வந்த சமையத்தில் தான் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர் சமீபத்தில் திடீரென சிஎஸ்கே என்ற அரசியல் கட்சியை தொடங்கியதாக அறிவித்தார்.
இதையடுத்து, கூல் சுரேஷ், கட்சியில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள் இணையப் போகிறாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஏன், காளியம்மாள் எங்கள் கட்சியில் இணையக்கூடாதா? அவர் எங்கள் கட்சியில் இணைய வந்தால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கத் தயாராக இருக்கிறேன். அவர் மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட யார் வேண்டுமானாலும் வரலாம். சிவப்பு கம்பளம் தயாராக இருக்கும் என்றார். இந்த நிலையில் கூல் சுரேஷ் விஜய்யை கலாய்த்து பேசியிருக்கிறார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய அவர், என்கூட இருப்பவர்கள் எல்லாம் அல்லாகூட இருப்பவர்கள்தான் என்று புரிகிறதா. ஆனால் நான் குல்லா போடும் ஆள் இல்லை. வாட் ப்ரோ.. திஸ் இஸ் வெரி ராங் ப்ரோ. குவார்ட்டர்,கோழி பிரியாணி கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்ப்பவன் இல்லை இந்த கூல் சுரேஷ். நான் கட்சி ஆரம்பித்திருக்கிறேன். தனித்துதான் நிற்கப்போகிறேன். பல கோடி செலவு செய்து மாநாடு நடத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்அடுத்தி, பள்ளிக்கூடம், மருத்துவமனை, வேலைகளுக்கு செல்பவர்களை தொந்தரவு செய்வதற்காக நான் கட்சியை ஆரம்பிக்கவில்லை என்று கிண்டலாக பேசியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் கடுப்பாகி கமெண்ட்ஸ்களை தெரிக்கவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தோல்வியே காணாத அட்லீயின் 'மெர்சல்' படம் நஷ்டமா...? தயாரிப்பாளர் ஓபன் டாக்...!