×
 

ரத்தம் கக்கிச் செத்துடுவீங்க.. மு.க.ஸ்டாலினை கலாய்த்து... உ.பி-க்களை மேடையிலேயே மிரட்டிய திமுக நிர்வாகி..!

''தொகுதி  மறுவரையறை வந்துவிட்டது... எட்டுத் தொகுதியை இழக்கப் போகிறோம்..?'' நீங்கள் எத்தனை தொகுதியை இழந்தால் எங்களுக்கு என்ன? ''இந்தி படையெடுப்பு வந்து விட்டது... அன்னை தமிழை அழிக்க ஆதிக்கம் வந்து விட்டது..'' அது ஏதாவது வரட்டும்.

நான் பேசும்போது இடையில் எழுந்து சென்றவர்கள் ரத்தம் கக்கிச் சாவார்கள்'' என திமுக பேச்சாளர் புகழேந்தி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருவண்ணாமலையில் திமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய திமுக பேச்சாளர் புகழேந்தி,   ''பேச வந்திருக்கிறான் புகழேந்தி. குறைந்தபட்சம் ஒரு இரண்டு மணி நேரமாவது பேச மாட்டானா? என்கிற ஏக்கம் உங்களுக்கு இருக்கிறது என எனக்கு தெரியும். அப்படி என்று நான் நினைத்தால், என்னைவிட முட்டாள் எவனும் கிடையாது. நீ என்ன நினைக்கிறாய்... இரண்டு மணி இல்லை, விடியகாத்தால ரெண்டு மணி வரை கூட பேசுவேன். கொடுத்துவிட்டு பேசு... நாங்க வாங்கிட்டு போகிறோம். அப்புறம் நீ விடிய விடிய பேசு என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

ஏனென்றால் உரலுக்கு ஒரு பக்கம் இடி. மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி. நான் கட்சி பேச்சாளர். கொள்கை பரப்பு அணி இணை செயலாளர். நான் முன்னாள் எம்.எல்.ஏ. லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து கட்சி நிர்வாகிகள் சிறப்பான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நான் ஒரு கால் மணி நேரத்தில் முடித்து விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நைட்டுக்கு எப்படியும் அமைச்சர் லைனில் வருவார். எம்.எல்.ஏ.,விடம் கேட்பார். ஒன்றிய செயலாளரிடம் கேட்பார். புகழேந்தி எப்படி பேசினான் என்று அவர்களிடம் கேட்பார்.

இதையும் படிங்க: கலாய்க்கும் துரைமுருகன்… திமுகவுக்கு எதிராக வெடிக்கும் வேல்முருகன்: ஆட்டி வைக்கிறதா அதிமுக..?

அவர்கள் சொல்லுவார்கள். நல்ல கூட்டம் என்று… ஆனால், வந்தவன் கால் மணி நேரத்தில் பேசிவிட்டு போயிட்டான் என்று சொல்வார்கள். அப்படி சொன்னால் என் கதை கந்தலாகிவிடும். ஆகையால், உனக்கும் இல்லாமல், எனக்கும் இல்லாமல் அரை மணி நேரத்திற்குள் பேசி விடுவேன்.  பேச்சு பேச்சாக இருக்க வேண்டும். இதைத் தாண்டி நானும் வரமாட்டேன். நீயும் வரக்கூடாது. ஆனால், இன்னும் ஒன்று சொல்கிறேன்.

நான் முன்னாள் எம்.எல்.ஏ., வாரிய தலைவர், கட்சியினுடைய கொள்கை வைப்பு இணைச் செயலாளர் என்று பார்க்காதே. நான் மோடி மஸ்தான் வித்தை கற்றவன். நான் பேசிக் கொண்டிருக்கும் போது யாராவது எழுந்து வீட்டுக்குக் கிளம்பினால் அரை மணி நேரத்தில் ரத்தம் கக்கிச் செத்து விடுவீர்கள். அப்புறம் என்னிடம் வரக்கூடாது. பேசிக் கொண்டே இருக்கும் போது யாராவது எழுந்து இருந்தால், அவர்களை நான் உட்காரு என்று சொல்ல மாட்டேன். கடைசியாக இருந்தாலும் உற்று ஒரு பார்வை பார்ப்பேன். உற்று ஒரு பார்வை பார்த்தால் நாளைக்கு நான் உன் சொந்தக்காரன் என்று சொல்லிவிடு.

ஆகையால், அதிகம் இல்லை, நான் ஒன்னும் பெரிய அரசியல் எல்லாம் பேசப்போவதில்லை. நம்ம ஜனங்களுக்கு தெரிந்தது, நமக்கு புரிந்தது மட்டும்தான் பேசுவேன். நான் போய் ''தொகுதி  மறுவரையறை வந்துவிட்டது... எட்டுத் தொகுதியை இழக்கப் போகிறோம்..?'' நீங்கள் எத்தனை தொகுதியை இழந்தால் எங்களுக்கு என்ன? ''இந்தி படையெடுப்பு வந்து விட்டது... அன்னை தமிழை அழிக்க ஆதிக்கம் வந்து விட்டது..'' அது ஏதாவது வரட்டும். நீ கொடு, நான் போகிறேன். உனக்கு எனக்கும் தான் பேச்சு. அவ்வளவுதான் டீல். தளபதி ஆட்சிக்கு வந்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்'' என திமுக பேச்சாளர் புகழேந்தி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: நாடாளுமன்றத்தை முடக்கிய தமிழக எம்.பி.க்கள்.. தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க வலியுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share