×
 

எல்லாவற்றுக்கும் மிரட்டல்.. பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டப்படும்.. ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவேசம்..!

திருமாவளவன், சீமான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டப்படும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் ஸ்ரீ அபிராமி அம்மன் பக்தர் குழு நடத்தும் ஆன்மீக கருத்தரங்கில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, கவர்னர் அரசியல் பேசக்கூடாது என கூறிவிட்டு அரசியல் கேள்வியாகவே கேட்பீர்கள் என நகைச்சுவையாக பேசினார். காஷ்மீர் தாக்குதல் சம்பந்தமாக திருமாவளவன் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு என்ன செய்யலாம் என திருமாவளவன் அவர்களிடமே கேளுங்கள் என்றார்.

தீவிரவாதிகள் நமது மக்களைக் கொன்று குவிக்கிறார்கள். மனைவியின் கண் முன்னே கணவர்கள் கொல்லப்படுகின்றனர்.  சகோதரி சொல்கிறாள் என்னையும் சுட்டு கொன்று விட்டுப் போ என்றதற்கு இங்கு நடந்ததை மோடியிடம் சென்று சொல் என்று கூறிவிட்டு செல்கிறான் அந்த பயங்கரவாதி. இதன் பின்பும் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறினால் எதற்கு நடவடிக்கை எடுக்கலாம்? என சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

வாக்கு வங்கி பலப்படும் என திருமாவளவன் நினைக்கிறார். காலச்சக்கரம் எப்பொழுதும் ஒரே மாதிரி சுற்றாது. தவறுகளை திரும்பத் திரும்ப செய்து வெற்றி கொள்ளலாம் என்று யார் நினைத்தாலும் தாழ்ந்து போவது உறுதி. இது போன்ற பேச்சுகள் எல்லாம் தோல்வி நிச்சயம் என்று நான் கருதுகிறேன். இதே உச்சநீதிமன்றம் தான் சொல்லியது.

கேரளா ஆளுநருக்கு பரிபூரணமான அதிகாரம் உள்ளது. துணைவேந்தர்களை நியமனம் செய்வது என்பது கவர்னர் முழுமையான உரிமை என்று சொன்னதும் உச்ச நீதிமன்றம்தான் இரண்டு தீர்ப்புகளை கூறியுள்ளனர். சட்ட வல்லுனர்களைக் கொண்டு இதுபோன்ற மோதல்கள் ஏற்படாமல் தடுப்பதுதான் எதிர்காலத்தில் நன்மை பயக்கும் என கருதுகிறேன் என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: 2 நாளில் 9 பயங்கரவாதிகள் வீடு இடிப்பு.. 14 பேர் யார்? பெயர் பட்டியல் வெளியீடு..!

யாரெல்லாம் திண்டுக்கல் மலை கோட்டை மீது சென்று இருக்கிறார்களோ? அவர்களுக்கு எல்லாம் புரியும். இந்து தெய்வங்களை வைப்பது தான் நியாயம், தர்மம், நிதி என்பது எல்லோருக்கும் தெரியும். இதற்கு யாரும் பெரிய சான்றுகளை தேடி அலைய வேண்டியது இல்லை. அபிராமி அம்மன் சிலை மலைக்கோட்டை மீது வைக்கப்பட வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. இதுகுறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்தல் என்பதை நாங்கள் நிச்சயமாக செய்வோம்.

ஜனநாயகத்தில் சட்டத்தை நம் கையில் எடுத்துக் கொள்வது என்பது சரியாக இருக்காது. சட்டத்திற்கு உட்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். துணைவேந்தர் மிரட்டப்பட்டதாக ஆளுநர் கூறியது குறித்த கேள்விக்கு தமிழ்நாட்டிற்கு எல்லாத்திற்கும் மிரட்டல் உள்ளது. என்பது எல்லோருக்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும். இதில் துணைவேந்தர் விதிவிலக்காக இருப்பது தமிழகத்தில் சாத்தியமா?

தீவிரவாதிகள் சதி திட்டம் எத்தனையோ முறை, முறியடிக்கப்பட்டுள்ளது. முறியடிக்கும் அரசு சார்ந்த அமைப்புகளுக்கு ஒவ்வொரு முறையும் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு ஒருமுறை அதிர்ஷ்டம் கிடைத்தால் போதும். ஆனால், கால சரித்திர வரலாற்றிலிருந்து ஒரு பாடத்தை கூட கற்றுக் கொள்ளாத நாடு பாகிஸ்தான். தற்போது நடந்த தீவிரவாத செயலுக்கு பாகிஸ்தான் மிகச் சரியான பாடத்தை கற்றுக் கொள்ளும். திருமாவளவன் சீமான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டப்படும் என கூறினார்.

இதையும் படிங்க: பயங்கரவாதிகள் தாக்குதல்.. இஸ்ரேலை போல பழிவாங்குவோம்..! பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share