×
 

டிஜிட்டல் அரெஸ்ட்..! முதியவரிடம் 12 லட்சத்தை அபேஸ் செய்த மோசடி கும்பல்..!

நவி மும்பையில் டிஜிட்டல் கைது செய்வதாக கூறி 70 வயது முதியவரிடம் 12 லட்சம் ரூபாயை மோசடி கும்பல் ஏமாற்றி உள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் சைபர் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இணைய வழியில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிப்பது, மிரட்டுவது உள்ளிட்ட பல விஷயங்களை சைபர் குற்றவாளிகள் மேற்கொள்கின்றனர். அதிலும் சுலபமாக ஏமாறும் நபர்களை குறி வைத்து பணப்பறிப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன.

ஆன்லைன் ஷாப்பிங், வங்கிக் கணக்குகள், கடன் அட்டைகள் போன்றவற்றை மோசடி செய்வதன் மூலம் பணம் திருடுவது, வைரஸ்கள் மற்றும் மால்வேர் போன்றவற்றை பரப்புவது, ஒருவரின் அனுமதியின்றி நெட்வொர்க்குகளை கையாள்வது, ஆபாச படங்களை பரப்புதல் என பல விஷயங்களை சைபர் குற்றவாளிகள் அச்சுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் நவி மும்பையில் ஒரு குற்றச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதையும் படிங்க: பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய மதபோதகர்! லாடம் கட்டிய போலீஸ்..!

நவிமும்பை கோபர்கைரானே பகுதியை சேர்ந்த 70 வயது முதியவருக்கு, சமீபத்தில் ஒரு வீடியோ கால் அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிர்பக்கத்தில் தோன்றிய நபர் ஒருவர் தன்னை சிபிஐ அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர் தங்கள் பெயரில் விமானத்தில் பார்சல் ஒன்று வந்துள்ளதாகவும் அது தங்களிடம் சிக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

அந்த பார்சலில் போதை பொருட்கள், பாஸ்போர்ட்டுகள், மடிக்கணினி உள்ளிட்டவை இருந்ததாகவும் அதனால் உங்களை டிஜிட்டல் கைது செய்யப் போவதாகவும் மிரட்டி உள்ளார். எனவே இந்த விவகாரத்தில் இருந்து தப்ப வேண்டும் என்றால் உடனடியாக 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைக்க வேண்டும் என்று ஒரு வங்கி கணக்கை கூறி உள்ளார்.

இதனை உண்மை என நம்பி பயந்து போன முடியலை அவள் தெரிவித்து வங்கி கணக்கிற்கு 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அனுப்பி உள்ளார். தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த முதியவர் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதியவரின் புகாரின் பேரில் போலீசார் பணம் பறித்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க: கார்டு மேல இருக்குற நம்பர் போலோ.. அமெரிக்க வாழ் இந்தியர்களையும் விட்டு வைக்கல.. சைபர் கிரைமில் ஈடுபட்ட 62 பேர் கைது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share