மிதமிஞ்சிய மது போதை.. காருக்குள்ளே சமாதியான உடல்.. ஏசி போட்டு காரில் தூங்கியவர் கதி..!
செங்கல்பட்டு அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த காரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் சாலை ஓரம் நிறுத்தப்பட்ட காரில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் கேளம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கேளம்பாக்கம் போலீஸ் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.
அப்போது கடந்த இரண்டு நாட்களாக (TN-11-BK-1569) பதிவு எண் கொண்ட கார் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்து தெரிந்தது, கார் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. காரில் ஏசி போட்டு கொண்டு கார் ஓட்டுநர் அவரது சீட்டில் சாய்ந்த நிலையில் தூங்கிய படியே இறந்துள்ளார்.
அதன் பின்னர் கார் கதவுகளை உடைத்து அழுகிய உடலை காவல் துறையினர் மீட்டனர். பின்னர் கார் பதிவு எண் மற்றும் காரில் இருந்த அலைபேசியை கைபற்றி அதில் உள்ள எண்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கார் ஓட்டுநர் காயார் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் வயது சுமார் 40 என்பதும் தெரிந்தது.
மணிகண்டன் பில்டிங் கட்டுமான தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. 2 நாட்களுக்கு முன்பு ஒரு முழு மது பாட்டல் வாங்கி மணிகண்டன் மூக்கு முட்ட குடித்து உள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், அதில் கொஞ்சம் சரக்கு மீதி இருந்துள்ளது. அதனை அப்படியே காரில் போட்டுள்ளார். அந்த மது பாட்டில் மட்டும் காரில் கிடந்துள்ளது.
இதையும் படிங்க: அயன் பட பாணியில் கடத்தல்.. ரூ.7.9 கோடி மதிப்புள்ள கொக்கையின்.. சீக்ரெட் ப்ளான் சொதப்பியதால் சிக்கல்..!
மது குடித்து விட்டு போதையில் நிதானம் இல்லாமல் காரை ஓட்ட முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார் மணிகண்டன். இதை அடுத்து, மணிகண்டன் புத்துபாக்கம் பேருந்து நிலையம் அருகில் சாலை ஓரம் காரை நிறுத்தி விட்டு கார் கதவுகளை மூடி கொண்டு ஏசியை போட்டு காரிலேயே தூங்கி இருக்கலாம் என்றும் போலீசார் யூகித்துள்ளனர்.
மூடி இருந்த காரில் வெகு நேரம் இருந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு போதையில் நாக்கு வறண்டு மணிகண்டன் இறந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர். பின்னர் அழுகிய சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை உடற்கூறு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்ஜினை 'ஆன்' செய்து வைத்து விட்டு, காருக்கு உள்ளே தூங்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இவ்வாறு காருக்கு உள்ளே தூங்கும் ஒருவருக்கு திடீர் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கூட இருக்கின்றன. காரின் சேம்பர் (Car Chamber), தீங்கு விளைவிக்க கூடிய பல்வேறு வாயுக்களால் நிரம்பியிருக்கும். இதன் காரணமாகவே திடீரென மரணம் ஏற்படலாம். அதுவும் ஏசி-யை 'ஆன்' செய்து வைத்து விட்டு, காருக்கு உள்ளே தூங்குவது இன்னும் பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்தும்.
ஏர் எக்ஸாஸ்ட் சிஸ்டம் (Air Exhaust System) சரியாக இயங்காமல் போனால், மூச்சு திணறல் காரணமாக ஒருவர் மரணிக்கலாம். இதுதவிர கார்பன் மோனாக்ஸைடின் (Carbon Monoxide) அளவு காருக்கு உள்ளே அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாலும், தூங்குபவர் மரணம் அடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏர்போர்ட் அருகில் ஹெராயின் விற்பனை.. போதை வியாபாரிகள் துணிகரம்.. ஸ்கெட்ச் போட்டு பிடித்த போலீஸ்..!