×
 

பஞ்சம் பிழைக்க திமுகவிற்கு வரவில்லை....அண்ணாமலைக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆவேச பதில்

பாஜக டப்பிங் வாய்ஸ் எடப்பாடி என்கிற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, திமுகவில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள் டப்பிங் வாய்ஸில் தான் திமுக இயங்குகிறது என பேசியதற்கு நாங்கள் பஞ்சம் பிழைக்க வரவில்லை என காட்டமாக பதிலளித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி பேசுவது பாஜகவின் டப்பிங் வாய்ஸ் என முதல்வர் பேசியதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை முதல்வருக்குத்தான் டப்பிங் வாய்ஸ் தேவைப்படுகிறது. பாஜகவிற்கு யாருடைய டப்பிங் வாய்ஸும் தேவை இல்லை. லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு செல்வாக்கு போச்சுன்னு முதல்வர் சொல்கிறார் ஆனால் அதன் பின்னர்தான் ஹரியானாவில் ஆட்சிக்கு வந்துள்ளோம், டெல்லியில் 27 ஆண்டுக்குப்பின் ஆட்சியை பிடித்துள்ளோம். மஹாராஷ்டிராவில் வெற்றி பெற்றுள்ளோம், பிஹாரில் வெற்றிப்பெற உள்ளோம். அதற்கு என்ன காரணம் சொல்வார். 

லோக்சபா தேர்தலில் 7% வாக்குகளை நீங்கள் இழந்துள்ளீர்கள், 2026 தேர்தலில் 20% வாக்கு கீழே வந்திருக்கும். டப்பிங் கதை திரைக்கதை வசனம் எல்லாம் அவர் பையனுக்கு தேவைப்படுகிறது. உதயநிதிக்கு சந்தானம் தேவைப்படுகிறார், முதலமைச்சருக்கு டப்பிங் செய்ய அவரது அமைச்சர்கள் உள்ளனர். அதிமுகவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். அதிமுகவிலிருந்து பல அமைச்சர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். 35 அமைச்சர்களில் 13 பேர் அதிமுகவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள். ஏன் திமுகவிற்கு சக்தி இல்லை என்பதை முதல்வரே ஒப்புக்கொள்கிறாரா?

இதையும் படிங்க: மத்திய அரசின் திட்டங்களை ஏற்க மாட்டீங்க.. காசு மட்டும் வேணுமா.? திமுக மீது மத்தியமைச்சர் எல்.முருகன் அட்டாக்.,!

ஆகவே அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர்கள் தான் முதல்வருக்கு டப்பிங்க் பண்ணிகிட்டிருக்காங்க ஆனால் எங்களுக்கு அப்படி அவசியமில்லை” என அண்ணாமலை பேசியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், ”கலைஞர் தலைமையை ஏற்று 25 ஆண்டுகளுக்கு முன் திமுகவிற்கு வந்தவன் நான், இன்றைக்கு பலரும் அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு நல்ல தலைவர்கள் இல்லாததால் கலைஞர் தலைமையை ஏற்று வந்தவர்கள் தான் இன்று திமுகவில் உள்ளனரே தவிர பஞ்சத்துக்கு வந்தவர்கள் அல்ல. திமுகவில் சேர்ந்து பல ஆண்டுகள் ஆனபின்னரும் அதிமுக திமுக என எங்களை பிரிக்கவேண்டாம். எங்கள் உடம்பில் ஓடுவது திமுக ரத்தம் தான்” இவ்வாறு அவர் ஆவேசமாக பதிலளித்தார்.

பொதுவாக திமுகவில் கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் அண்ணாமலையின் கருத்தே உள்ளது. திமுகவில் ஆண்டாண்டு காலமாக உழைத்தவர்களை விட அதிமுகவிலிருந்து வந்த 13 பேருக்கு அமைச்சர் பதவி உள்ளிட்டவை கொடுத்து அழகு பார்க்கிறார்கள், குறிப்பாக சேகர்பாபு, செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், ரகுபதி, முத்துசாமி உள்ளிட்ட பலர் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளது திமுகவினரிடையே அதிருப்தியை கிளப்பி உள்ளது. 
 

இதையும் படிங்க: அரசியலுக்காக இந்தி எதிர்ப்பு... ஆதாயத்துக்காக சிபிஎஸ்இ பள்ளிகளா.? திமுகவை உலுக்கும் ஹெச். ராஜா.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share