குளவிக் கூட்டில் கை வைக்காதீங்க..! ஹிந்தி படிக்க சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு.. துரைமுருகன் தடாலடி..!
தாங்கள் நியாயமாக ஆட்சி செய்ய நினைப்பதாகவும், எனவே குளவி கூட்டின் கை வைக்க நினைக்காதீர்கள் என்றும் துரைமுருகன் எச்சரித்துள்ளார்.
மத்திய அரசின் தொகுதி மறு வரையறை, ஹிந்தி திணிப்பு ஆகியவற்றை கண்டித்து தமிழக முழுவதும் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. திருவள்ளூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிலையில் குடியாத்தத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துறைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது குடியாத்தம் நகரத்தின் பெருமைகளை பற்றியும் தன்னை திமுகவில் இணைத்து கொண்ட விதம் தொடர்பாகவும் பேசினார். குடியாத்தம் தான், தன்னை திமுகவாக ஆக்கிய ஊர் என பெருமையுடன் கூறினார்.
இதையும் படிங்க: நாளை பார்லிமென்ட்., இன்று எம். பி.க்கள் கூட்டம்! முதல்வரின் புதிய ரூட்!
தொடர்ந்து மத்திய அரசின் தொகுதி மறுவறை தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் துரைமுருகன், மக்கள் தொகை அடிப்படையில் தானே எம்.பி.க்களை கொடுக்கிறீர்கள். தற்போது உள்ள மக்கள் தொகைக்கு 39 எம். பிக்கள் தான் உள்ளனர். அதையும் குறைக்க போவதாக கூறுவது எந்த விதத்தில் நியாயம் என பேசினார். தமிழ்நாட்டில் எண்ணிக்கை குறையாது எனக் கூறுவதை யாராவது நம்ப முடியுமா என்றும் காட்டமாக தெரிவித்தார்.
மத்திய பாஜக அரசால் முப்பெரும் பிரச்சினைகளை தமிழ்நாடு சந்தித்து வருவதாக துரைமுருகன் கூறினார். தொகுதி மறு வரையறை மொழிக் கொள்கை குறிப்பாக நிதி ஒதுக்காமல் நிராகரிக்கப்படுவது., இயற்கை பேரிடர்கள் வெள்ளம் வந்த போதும் தமிழ் நாட்டிற்கு ஒரு நிதியை கொடுக்காமல் நிராகரித்ததாக சுட்டி காட்டினார்.
தற்போது ஹிந்தி மொழியை ஏற்காததால் நிதி ஒதுக்காமல் நிராகரிப்பதாக குற்றம் சாட்டினார். ஹிந்தி படிப்பதும் படிக்காமல் போவது எனது உரிமை… நானும் இந்த நாட்டு குடிமகன் நீயும் இந்த நாட்டு குடிமகன்… உனக்கு என்ன உரிமை என்னை படிக்க சொல்வதற்கு என கேள்வி எழுப்பினார்.
இதை கேட்டால் தங்களை காட்டு மிராண்டி என்பதா என சீரிய அவர், தமிழ்நாட்டில் ஒருத்தனுக்கு ஒருத்தி என்பது பின்பற்றப்படுவதாகவும், கற்பு உள்ள நாடு இது எனவும் பேசினார்.
கங்கை கொண்டவன், கடாரத்தை வென்றவன், 5 ஆயிரம் ஆண்டுகள் பெருமை கொண்டு வாழ்ந்தவன் தமிழன் என கூறிய அவர், நாகரீகமற்றவர்கள் என பேசினால் நாக்கை அறுத்து விடுவான் தமிழன் என தெரிவித்தார். தாங்கள் நியாயமாக ஆட்சி செய்ய நினைப்பதாகவும் எனவே குளவி கூட்டில் கை வைக்காதீர்கள் என்றும் எச்சரித்தார்.
இதையும் படிங்க: எப்படிப்பா உங்கப்பன உறிச்சி வச்ச மாதிரி ஆட்சி செய்கிறாய்..? என ஸ்டாலினிடம் கேட்டேன்.! சைதாப்பேட்டையில் துரைமுருகன் அதிர்ச்சி பேச்சு..!