“நீங்க ஞானசேகரன தொட்டா?... நாங்க சுதாகரை தூக்குவோம்” - அதிமுகவிற்கு டப் கொடுத்த திமுக!
இவன் தான் அந்த சார் என்ற பதாகைகளுடன் சட்டமன்றம் வந்த திமுக எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இவன் தான் அந்த சார் என்ற பதாகைகளுடன் சட்டமன்றம் வந்த திமுக எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி “யார் அந்த சார்?” என்ற போராட்டத்தை அதிமுக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. யார் அந்த சார்? என்ற வாசத்துடன் முதலில் சென்னையில் போராட்டத்தை தொடங்கிய அதிமுக, தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களின் வாகனங்களில் “யார் அந்த சார்?” என்ற ஸ்டிக்கரை ஒட்டி, பட்டி, தொட்டி வரை போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஜனவரி 8ம் தேதி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மாணவியின் பக்கம் நின்று நீதி கிடைத்திட நடவடிக்கை எடுக்க ஆணித்தரமாக அரசு செயல்படும் என்றும், குற்றச்செயல் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். அதனை மீறி எதிர்கட்சிகள் அரசியல் உள்நோக்கத்துடன் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டினார். உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்புக் குழு தான் புலன் விசாரணை செய்து வருவதால் யார் அந்த சார்? என்பது விரைவில் தெரிய வரும் என்றும், யார் அந்த சார்? என கேள்வி எழுப்பும் எதிர்கட்சிகளே அதற்கான ஆதாரம் இருந்தால் புலன் விசாரணை குழுவிடம் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரேஷன் கடையில் பொங்கல் பரிசு.. கர்பிணிகள் முதியவர்களுக்கு முன்னுரிமை ..அசத்தும் அரியலூர் ..!
ஆனால் முதலமைச்சரின் விளக்கத்தில் திருப்தி அடையாத அதிமுகவினர் நேற்றும் சட்டப்பேரவைக்கு கறுப்புச்சட்டையில் யார் அந்த சார் பேட்ஜ் அணிந்து வந்தனர். இதனால் கடுப்பான திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று அதிமுகவினரின் செயலுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
அதிமுகவினரின் “யார் அந்த சார்?” கேள்விக்குப் பதிலடியாக அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகியின் புகைப்படம் அடங்கிய “இவன் தான் அந்த சார்?” பதாகைகளுடன் சட்டப்பேரவைக்கு வந்தனர். சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக அதிமுக நிர்வாகி சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அதிமுக வட்டச்செயாலாளர் சுதாகர் அடிப்படை உறுப்பினர் முதற்கொண்டு அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 8ம் தேதி அறிவித்திருந்தார்.
இருப்பினும், நீங்க அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை கையில் எடுத்தால், நாங்கள் அண்ணா நகர் பாலியல் வழக்கை கையில் எடுப்போம் என அதிமுகவிற்கு திமுகவினர் பதிலடி கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: டங்ஸ்டன் விவகாரம் - போராடும் மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் மூர்த்தி சொன்ன முக்கிய தகவல்!