சீமான் ஒரு கழிசடை, புதுப்பிராணி - சகட்டுமேனிக்கு சாடிய திமுக நாளிதழ் முரசொலி!
பெரியாரைப் பற்றி பேச உனக்கு என்ன அருகதை? என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.
பெரியாரைப் பற்றி பேச உனக்கு என்ன அருகதை? என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.
சீமான் ஒரு கழிசடை:
கடந்த 3 நாட்களாகவே தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பிய சீமானின் பேச்சுக்கு, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பதிலடி கொடுத்துள்ளது. “வாயை அடகு வைப்பதையே பிழைப்பாகக் கொண்டு வாழும் புதுப் பிராணி ஒன்றைப் பிடித்து பெரியாரைக் கொச்சைப்படுத்திப் பேச கூலி கொடுத்துக் கொண்டிருக்கிறது ஆரியக் கூட்டம். அவனுக்கு வெட்கமும் கிடையாது. மானமும் கிடையாது. சூடும் கிடையாது. சொரணையும் கிடையாது. எவன் கொடுத்தாலும் எதிர் வீட்டைப் பார்த்துக் குரைப்பான். எவன் ஏவி விட்டாலும் எதிரே நிற்பவனைப் பார்த்து கனைப்பான். பெரியாரை விமர்சிக்க ஆரிய கூட்டத்திடம் வாங்கி திண்ணும் கழிசடை” என சீமானின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் ஒருமையில் விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: சீமானுக்கு கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் சோகம்.. தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்!
சவுண்ட்டுக்கு தக்க அளவில் அமெண்ட்:
செத்து மடியும் ஈழத்தமிழன் வீட்டில் இருந்தே சொத்து பறித்து வாழ்ந்தவன். தற்போது அவர்கள் பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டதால் ‘திராவிடத்தைத் திட்ட நாக்கு வாடகைக்கு விடப்படும்’ என்ற கட்சி கொள்கையுடன் திராவிட கட்சிகளை விமர்சித்து சிலரிடம் இருந்து தட்சணை பெறுவதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, “சவுண்ட்டுக்குத் தக்க அளவில் அமௌண்ட்! ‘..ச்சீ!’ – இப்படி ஒரு பிழைப்பை இந்த யுகத்தில் எவனும் பிழைக்கவில்லை!” என பெரியார் குறித்து அவதூறு பரப்ப சீமான் யாரிடமோ பணம் வாங்கியிருக்கிறார் என அடித்துக்கூறியுள்ளது முரசொலி.
விஜயலட்சுமி விவகாரத்திலும் சாடல்:
சீமான் விஜயலட்சுமி விவகாரத்தை நேரடியாக குறிப்பிட்டுள்ள முரசொலி, ‘மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம், மானத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரே ஒருவனுடன் போராட முடியாது’ என்றார் தந்தை பெரியார். அது இவன்தான். மானம் இருந்திருந்தால் விஜயலட்சுமியின் ஒரு வீடியோவுக்கே தலைமறைவு ஆகி இருப்பானே! ஆயிரம் வீடியோக்களில் ஒரு லட்சம் வசைச்சொற்களைக் கேட்ட பிறகும் ஒருவனால் எப்படி மீடியாக்களுக்கு முன்னால் பேட்டி தர உட்கார முடிகிறது” என கடுமையாக விமர்சித்துள்ளது.
விரைவில் கைதாகிறாரா சீமான்:
பெரியார் பற்றி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தரம் தாழ்த்தி விமர்சனம் செய்துள்ளார். இதற்காக தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்து வருகின்றனர். திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு பகுதிகளில் சீமானுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களிலும் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் படி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி சீமான் தெரிவித்த உள்ள கருத்துக்கள் சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கும் வகையில் உள்ளதால் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 20ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு உத்தவிட்டார். இதனால் சீமான் விரைவில் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்படி என்ன பேசினார் சீமான்:
கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “தாய், மகள், அக்கா, தங்கை என்ற பேதம் பாராமல் யாரோடு வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் பேசியதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். சீமானின் இந்த கருத்து பெரியார் ஆதரவாளர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பெரியார் பற்றி பேசும் சீமானே ஆதாரம் இருக்கா..வறுத்தெடுத்த திருமா ..!