×
 

தொகுதி மறுசீரமைப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு..! ஆதரவு திரட்டும் திமுக..!

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்ட திமுக சார்பில் 2 பிரதிநிதிகள் இன்று ஒடிசா செல்கின்றனர்.

இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறு சீரமைப்பு செய்யும்போது, மக்கள் தொகை கட்டுப்பாட்டு முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்ட தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால் தான் தொகுதி மறு சீரமைப்பை தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கிறது. தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றக்கூடாது என்று அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: மூளைச்சாவு அடைந்த 2 வயது குழந்தை... உடல் உறுப்புகளை தானமாக கொடுத்த பெற்றோர்!!

இதேபோல் மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்றால்தான் தமிழகத்திற்கு உரித்தான நிதியை கொடுப்போம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மும்மொழி கொள்கையின் மூலம் ஹிந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொள்ளதாக கூறியும் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

மத்திய அரசின் இந்த மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் பல தரப்பட்ட அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மும்மொழிக் கொள்கையை ஏற்று தான் ஆக வேண்டும் என்று மத்திய அரசு ஒற்றைக் காலில் நின்று கொண்டிருக்கிறது. 

மேலும் நாடாளுமன்றத்தில் திமுகவிற்கும் மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்ட திமுக சார்பில் 2 பிரதிநிதிகள் இன்று ஒடிசா செல்கின்றனர். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா., எம். பி. தயாநிதி மாறன் ஆகியோர் ஒடிசா செல்கின்றனர். இன்று ஒடிசா சென்று நவீன் பட்நாயக் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளனர்.

இதையும் படிங்க: மூடநம்பிக்கையால் வந்த விபரீதம்.. பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த குடும்பம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share