×
 

நீட் விலக்கில் கைவிரித்த திமுக... ரகசியம் தெரியாமலே உதய் விட்ட உதார் வாக்குறுதி... விவாதம் கிளப்பிய விஜயின் ஒற்றை ட்வீட்..!

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் இருப்பதாக உதயநிதி சொன்னாரே... அந்த ரகசியம் என்னவென்றே தெரியாமல் மக்களை ஏமாற்றுவதற்காக மட்டும் நோக்கத்தில்தான் அப்படி சொல்லி இருக்கிறார்

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் வாக்குறுதியில், ‘‘முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வு ரத்தச் செய்வது குறித்து சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இது குறித்து சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின்போதுஎதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின்,  ‘‘நீட் தேர்வை நாங்கள் ரத்து செய்ய முடியாது ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது.

நீட் தேர்வை நாங்கள் ரத்து செய்ய முடியாது. ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் நீட் விளக்கு பெற்றிருப்போம்’’ எனத் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: விஜய்க்கு வேட்டு வைக்கிறாரா புஸ்ஸி ஆனந்த்..? தெளிவில்லாத தலைவரால் தெளியாமல் தவிக்கும் தவெக நிர்வாகிகள்..!

இது மக்களை ஏமாற்றும் செயல் என தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் தளப் பதிவில், ‘‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே... நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.

கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?

எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை’’ எனத் தெரிவித்துள்ளார் விஜய்.

இதற்கு பதிலடி கொடுத்து வரும் திமுக ஆதரவாளர்கள், ‘‘நீட் தேர்வு ரத்து செய்ய கையெழுத்து போட மாட்டேன் என்று சொன்ன ஆளுநரை கேட்க வக்கில்லை.

சட்டம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியாயிற்று, நீதிமன்றத்தில் வழக்கும் இருக்கிறது. மாநில அரசு என்ன செய்ய முடியுமோ அதை செய்துவிட்டார்கள்.

உங்களுக்கு அரசியல் சொல்லி கொடுத்த ஆட்கள் இதை சொல்லவில்லையா? இல்லை, உங்கள் வசனக் குறிப்பில் அந்த பகுதி இல்லையா??’’ எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து, நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என கூறிவிட்டு தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று கூறுவது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் இருப்பதாக உதயநிதி சொன்னாரே... அந்த ரகசியம் என்னவென்றே தெரியாமல் மக்களை ஏமாற்றுவதற்காக மட்டும் நோக்கத்தில்தான் அப்படி சொல்லி இருக்கிறார்’’ என தவெக தொண்டர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆடியோ லீக்-ஆடிப்போன புஸ்ஸி..! விஜய் எடுக்கும் அடுத்த முடிவு என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share