'திராவிடம் என்பது ஏமாற்று வேலை. அது இனி தமிழகத்தில் உதவாது...' சீமானுக்கு ராதாரவி தீவிர ஆதரவு..!
சீமான் சொல்லுகிற பாயிண்ட்டை யாராவது பிக் அப் பண்ண வேண்டும். ஒரு பாயிண்டிலாவது வந்து நில்லுங்கள்.
"பெரியாருடன் இல்லாமல் இருந்திருந்தால் எங்க அப்பா (எம்.ஆர்.ராதா) உருப்பட்டிருப்பார். அவருடன் சேர்ந்ததால் தான் உருப்படாமல் போய் விட்டார் '' என நடிகவேல் ராதாரவி தெரிவித்துள்ளார்.
பெரியாரையும், பெரியாரைன் கொள்கைகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவரது பேச்சுக்கு எதிராக வழக்குகளும், போராட்டங்களும் நடந்து வருகின்றனர்.
இந்நிலையில் சீமானின் கோட்பாடுகளை பாராட்டித் தள்ளியுள்ளார் நடிகரும், அரசியல் பிரமுகருமான எம்.ஆர்.ராதாதவி. இதுகுறித்து அவர் பேசியுள்ள வீடியோவில், "தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும், முடிவெடுக்கும் முதன்மையான இடத்தில் இருக்கவேண்டும் என்று சீமான் பேசுவது சரியான அரசியல் அனைவரும் சீமானின் அரசியலை ஆதரிக்கவேண்டும்.
இதையும் படிங்க: ஏய்..! பெரியாரிஸ்டுகளே... முதல்ல உங்க வீடுகள்ல அம்பேத்கர் போட்டோ இருக்கா..? நேரடி சவால் விட்ட சீமான்
சீமான் சொல்வதெல்லாம் ஒரு விதத்தில் உண்மை. திராவிடம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. அது இனி இந்தக் காலத்திற்கு உதவாதது. சீமானுடைய நிலைப்பாடு என்ன? தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்பதுதான். அது மிகச் சரியானது. கேரளாவிற்கு சென்று ஒரு தமிழன் ஆள முடியுமா? மகாராஷ்டிராவில் போய் ஆள முடியுமா? ஏண்டா தமிழ்நாட்டுக்கு முதல்வரா மட்டும் ஒரு தமிழன் வர முடியல. அதைத்தான் கேட்கிறார் சீமான்.
சீமான் பேச்சை எல்லாம் கைதட்டி ரசிப்பார்கள்.அப்புறம் விட்டுவிடுவான். அவன் தான் தமிழன்.இந்துக்களை திட்டிக்கிட்டு இந்து உள்ள நாட்டில் தலைவர்கள் ஆகிறார்கள் என்றால் யாரு முட்டாள்... இந்துக்கள் முட்டாள். தமிழன் ஆள வேண்டும் எனச் சொல்கிற சீமானுக்கு இந்நேரம் லட்சக்கணக்கில் அங்கே கூட்டம் நிறைந்திருக்க வேண்டும். சீமான் சொல்லுகிற பாயிண்ட்டை யாராவது பிக் அப் பண்ண வேண்டும். ஒரு பாயிண்டிலாவது வந்து நில்லுங்கள். தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும். அங்கே வந்து நில்லுங்கள்.
வேறு மாநிலத்தவர்கள் இங்கே வந்து எந்த அமைச்சராக இருந்தாலும் பரவாயில்லை. தமிழன் முதலமைச்சராக இருக்க வேண்டும். அதை ஒன்றைத்தானே சீமான் கேட்கிறார். சீமானைப் போன்றவர்களை எனது அப்பா பார்த்திருந்தால் கொடி கட்டி பறக்க வைத்திருப்பார். நாம் அனைவரும் ஒரே பக்கம் மட்டுமே ஹலோ ஹலோ என்று சொல்லிக் கொண்டிருந்தால் வாழ்க்கை நடக்காது ராஜா. நடுநிலைமையோடு இருந்தால் தான் நல்லபடியாக நடக்கும். ஒரு நாடு கெடுவது கெட்டவர்களால் அல்ல. நல்லவர்கள் அமைதியாக இருப்பதால் தான்'' என சீமானுக்கு சப்போர்ட் செய்துள்ளார் ராதாரவி.
இதையும் படிங்க: பாட்டு கச்சேரி நடத்தி பெரியாரிஸ்ட்டுகளை வெறுப்பேற்றிய நாதகவினர்... சுடச்சுட பிரியாணியுடன் தூள் பறந்த விருந்து!