×
 

'திமுக கூட்டணிக்குள் பூகம்பம்... ஸ்டாலின் ஆட்சி மீது கோபம்...' விஜயை கூட்டணிக்கு அழைக்கும் காங்கிரஸ்..!

ஈரோட்டில் திமுக போட்டியிடுவதில் ராஜதந்திரம் உள்ளது. திமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் வரவேற்பேன்

ஒரு வாரத்திற்கு முன்பு "தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி நடைபெற்று வருகிறது" என்று புலங்காகிதம் அடைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இப்போது  'இந்த ஆட்சி மீது கோபம் உள்ளது'' என புலம்பித் தவிக்கிறார். 

இன்றி பேசிய அவர்,  ''இந்த ஆட்சி மீது எனக்கு கோபம் உள்ளது; பொங்கலுக்கு ரூ.1,000 தராதது பற்றி துரைமுருகன் அப்படி கூறியிருக்கக் கூடாது. ஈரோட்டில் திமுக போட்டியிடுவதில் ராஜதந்திரம் உள்ளது. திமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் வரவேற்பேன்'' என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதன் பின்னணியில் பல அர்த்தங்கள் பொதிந்துள்ளதாக அரசியல் அரங்கில் விவாதம் எழுந்துள்ளன.

தமிழக வெற்றிக் கழக தலைமையிலான கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு... கூட்டணி ஆட்சி என்கிற அரசியல் அஸ்திரத்தை தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டில் வீசினார் விஜய். நம்மை நம்பி வந்தவர்களை காப்பாற்ற வேண்டியது நமது கடமை. எனவே ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு வழங்கப்படும். எங்களிடம் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும். நாங்கள் தனியாக மெஜாரிட்டி பெறுவோம். தனியாக மெஜாரிட்டி பெற்றாலும்.. எங்களுடன் கூட்டணியில் இருப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும், என்று விஜய் அறிவித்து இருந்தார். தமிழக அரசியலுக்குப் கூட்டணி ஆட்சி கான்செப்ட் புதிய விசயம் என்பதால், அது குறித்த வாத-பிரதிவாதங்கள் தமிழக அரசியல் கட்சிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தின. அதேசமயம், கூட்டணி ஆட்சியின் லாப-நட்ட கணக்குகளை போட்டுப் பார்த்தபடி இருக்கிறார்கள். 

இதையும் படிங்க: 'விஜயால் அதிமுகவுக்கு பலம்..! சிவகாசியில் கூட்டணி வெடியை பற்ற வைத்த எடப்பாடியார்..?

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு விஜய் பாசம் கொஞ்சம் அதிகமாவே தெரிகிறது. ஜூன் மாதம், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, "நாம் பிறரை சார்ந்தே இருக்கப்போகிறோமா? அல்லது சுயமாக இருக்கப்போகிறோமா?" என காங்கிரஸ் சார்பு அரசியல் குறித்து கருத்து சொல்ல தொண்டர்களிடம் செல்வப்பெருந்தகை கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

"கூட்டணி கட்சிகளில் தோழமை என்பது வேறு, நாம் கூட்டணி கட்சிகளை சார்ந்தே இருக்கப் போகிறோமா என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்" என செல்வப்பெருந்தகை அரங்கத்தில் இருந்த தொண்டர்களிடம் கேள்வி எழுப்பியது சர்ச்சைக்கான தொடக்கமாகவும் அமைந்தது.அடுத்து முன்னாள் காங்கிரஸ் பேரியக்கத்தின்  தலைவர்களை தனது கொள்கைத் தலைவர்களாகக் கொண்டிருக்கும் விஜய் அவர்கள் வகுப்புவாத பாசிச சக்திகளை எதிர்ப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்'' என்றும் விஜய் பாசத்தை அவ்வப்போது உணர்த்தி வந்தார்  செல்வப்பெருந்தகை. 
 
காங்கிரஸ் சிட்டிங்க் தொகுதியான ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் கட்சி நின்று வெற்றி பெற்ற தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ீட் தராமல் போனது செல்வப்பெருந்தகைக்கு ரொம்பவே அதிருப்தியைகொடுத்தது. இதனை அடுத்து ஆளும் திமுக கூட்டணி ஆட்சியை வெகுவாகவே விமர்சிக்கத் தொடங்கி விட்டார் செல்வப்பெருந்தகை. 'இந்த ஆட்சி மீது எனக்கு கோபம் உள்ளது; பொங்கலுக்கு ரூ.1,000 தராதது பற்றி துரைமுருகன் அப்படி கூறியிருக்கக் கூடாது.ஈரோட்டில் திமுக போட்டியிடுவதில் ராஜதந்திரம் உள்ளது'' எனத் தெரிவித்துள்ள அவர் ''திமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் வரவேற்பேன்'' எனக் கூறியிருப்பது தான் நெருடலாக இருக்கிறது. திமுக தங்கள் அரசியல் எதிரி என முதல் மாநாட்டிலேயே வெளிப்படையாகவே சொல்லி, இப்போது வரை திமுக எதிர்ப்பில்தான் அரசியல் செய்து வருகிறார் விஜய். திமுகவும் விஜயை, அவரின் அரசியல் வருகையை கடுமையாகச்சாடி வருகிறது. இந்தச் சூழலில் திமுக இருக்கு கூட்டணிக்கு எப்படி வருவார் விஜய்?

அதாவது காங்கிரஸ் -விஜயின் தவெக கூட்டணிக்கு தயார் என்கிற சமிக்ஞைதான் செல்வப்பெருந்தகையின் இந்தப்பேச்சு என்கிறார்கள்.         
 

இதையும் படிங்க: ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆப்பு வைத்த விஜய்… ஒற்றை அறிவிப்பில் அண்ணனை கதறவிட்ட தம்பி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share