×
 

கூட்டணி.. ஆட்சி.. சர்ச்சை! அனுமதியின்றி பேட்டிக் கொடுக்காதீங்க.. அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்..!

அதிமுக தலைமை அனுமதியின்றி தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் உள்ளிட்டவற்றுக்கு பேட்டிக் கொடுக்க வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளார்.

2026 ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்க பாஜக – அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழகம் வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி செய்து அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் பாஜகவுடன் தேர்தல் கூட்டணியா அல்லது கூட்டணி ஆட்சியா என்பது பெரும் பேசுப் பொருளாக மாறி உள்ளது.

காரணம் தேர்தல் அறிவிப்பின்போது அமித்ஷா, கூட்டணி ஆட்சி என கூறியதாக  கூறப்படும் நிலையில், இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இது தொடர்பாக அதிமுகவினரிடையே தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். கழகத்தின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கழகத் தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும்.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சி குறித்து பொய் கருத்தை பரப்புகிறார் சேகர்பாபு..! சட்டசபையில் அதிமுக அமளி..!

ஆகவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும்; கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களும், கழகத்தின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும், கழகத் தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்னபிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மக்களை நல்லா ஏமாத்துறாங்க..! மாநில சுயாட்சியை கிழித்தெடுத்த ஜெயக்குமார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share