×
 

அங்கிட்டு ஞானசேகரன் இங்கிட்டு சுதாகர்..! கழகங்களின் மானத்தை வாங்கும் நிர்வாகிகள்! 

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் நேற்று கைதான அதிமுக வட்டச்செயாலாளர் ப.சுதாகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட 103வது வட்ட செயலாளர் பொறுப்பு மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு: 

சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சதீஷ் என்ற இளைஞர் மீது புகார் கொடுக்கச் சென்ற பெற்றோர் தாக்கப்பட்டனர். மேலும் சிறுவனின் பெயரை நீக்க காவல் ஆய்வாளர் தங்களை வற்புறுத்தியதாக பெற்றோர் வெளியிட்ட வீடியோ பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால் இதற்கு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி இடைக்கால தடை பெற்றதோடு, தமிழகத்தைச் சேர்ந்த டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. 

இதையும் படிங்க: ஆளுனருடன் அதிமுக பாஜக கள்ளக் கூட்டணி..ராணிப்பேட்டையை அலறவிட்ட திமுக போஸ்டர் ..!

இந்த வழக்கின் விசாரணையில் 16 வயது சிறுவன் மற்றும் சதீஷ் என்ற இளைஞர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அதிரடி திருப்பமாக அதிமுக நிர்வாகி சுதாகர் என்பவரும் கைது செய்யப்பட்டார். அதாவது, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முயற்சி செய்ததன் அடிப்படையில் அவரை கைது செய்தனர். 

அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய எடப்பாடி: 

தற்போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி, அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்றத்திற்குள்ளேயே யார் இந்த சார்? என்ற பேட்ஜை அணிந்து சென்று அதிமுகவினர் கெத்து காட்டினர். இந்நிலையில் அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக வட்டச்செயலாளர் குற்றவாளிக்கு சாதகமாக நடந்து கொண்டது கடும் விமர்சனங்களைக் கிளப்பியது. 

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில்  அதிமுக நிர்வாகி நேரடியாக தலையிட்டதால், இதில் அக்கட்சியின் முக்கிய புள்ளிகள் யாருக்காவது தொடர்பு இருக்குமா?, பாலியல் வழக்கில் தொடர்புடையவரைக் கட்சியில் வைத்துக்கொண்டு தான் அதிமுக பெண்களுக்காக போராடுகிறதா? என்றெல்லாம் சோசியல் மீடியாக்களில் திமுக உடன்பிறப்புகள் பரப்ப ஆரம்பித்தனர். இந்த சர்ச்சைக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக வட்டச்செயாலாளர் சுதாகரை கட்சியில் இருந்து நீக்கியதோடு மட்டுமின்றி, தென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட 103வது வட்ட செயலாளர் பொறுப்பு மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியைக் கூட பறிந்துள்ளார். 

காற்றில் பறக்கும் கழகங்களின் மானம்: 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் திமுக உறுப்பினர் தான் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஏனெனில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உள்ளிட்ட பலருடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியான நிலையில் சர்ச்சை எழுந்தது. மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஞானசேகரன் திமுக உறுப்பினர் தான் என தொடர்ந்து கூறி வருகிறார். மேலும் இவர் திமுக மாநாட்டில் பங்கேற்ற வீடியோவும் வெளியாகி வைரலானது. 

பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த புகாரில், “உன்னை ஒரு சாரிடம் கூட்டி செல்வேன். நீ ஒத்துழைக்க வேண்டும். நீ Sir ஒருவருடனும் இருக்க வேண்டும். தயாராக இரு” என்றெல்லாம் மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் யார் அந்த சார்? திமுக அமைச்சரா அல்லது அதை விட முக்கியமான பெரும் புள்ளியா?, இதனால் தான் திமுக அரசு இந்த விவகாரத்தில் போராட்டங்களை தடை செய்கிறதா? என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றன. 

எது எப்படியோ ஞானசேகரன், சுதாகர் என இருவரும் வசமாக சிக்கிய பாலியல் வன்கொடுமை வழக்குகளால் கழகங்களின் மானம் காற்றில் பறப்பதாக தமிழ்நாடு மக்கள் தலையில் அடித்துக்கொள்கின்றனர். 
 

இதையும் படிங்க: ரொம்ப ஓவரா போறீங்க ..பிரிவினைவாதத்தை தூண்டுவது யார் ? திமுகவை வறுத்தெடுத்த தமிழிசை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share