தாயகம் திரும்ப விரும்பும் ஈழ தமிழர்களுக்கு உதவ தயார்.. உதவிக்கரம் நீட்டிய இலங்கை..!
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்ப விரும்பும் ஈழ தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இலங்கையை தங்கள் மரபுவழி பிறப்பிடமாக கொண்டவர்கள் இலங்கை தமிழர்கள் என்று கூறப்படுகின்றனர். 1948ல் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்ற காலத்தில் இருந்தே, தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே சிக்கல் இருந்து வருகிறது. இலங்கையில் உள்நாட்டுப்போர் தொடங்கிய போது, சிங்களர்களால் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். இதனால் இலங்கை வாழ் தமிழர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளுலகம் முழுவதும் அகதிகளாக புலம்பெயர்ந்தனர்.
இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் இன்றும் அகதிகளாக ஈழ தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 1983ம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கை தமிழர்கள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 108 மறுவாழ்வு முகாம்களில் 60 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசித்து வருவதாகவும், 40 ஆயிரம் பேர் முகாம்களுக்கு வெளியே வசித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.150 கோடி ஊழலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கைது.. அப்போ ரூ.1000 கோடிக்கு..? பாஜகவுக்கு சீமான் நறுக் கேள்வி.!!
இந்த நிலையில் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியாவில் அகதிகளாக உள்ள ஈழ தமிழர்களை இலங்கைக்கு திரும்ப அழைத்து வருவது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது பேசிய அவர், இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர வேண்டும் என கூறப்பட்டு வரும் நிலையில் யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்க முடியாது.
ஆகையால் இலங்கை திரும்ப விரும்பும் நபர்களுக்கு உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இது தொடர்பாக இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கான கோரிக்கையும் அரசாங்களிடம் முன்வைக்கப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: விடுதலை புலிகளால் உயிருக்கு ஆபத்து: 350 பாது காவலர்கள் கேட்கும் ராஜபக்ஷ..!