×
 

அம்மாடியோவ்! 14 வது குழந்தைக்கு அப்பாவான பிரபலம்!!

உலகின் கோடீஸ்வரரான எலான் மஸ்க் 14வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான் எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்கார நபராக உள்ளார். அவரது சொத்துக்களுக்கு வாரிசுகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றனர். எப்பொழுதும் சர்ச்சைக்குரிய நபராக வலம் வரும் எலான் மஸ்க் மீது அண்மையில் பிரபலமான பெண் ஒருவர் வைத்த புகார் பேசுபொருளானது. பிரபல எழுத்தாளரும், சமூக ஊடக பிரபலமான அஷ்லே செயிண்ட் கிளேர் எலான் மஸ்க் மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார். அதாவது தனது குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை என்றும், எலானின் 13வது குழந்தையை தான் பெற்றெடுத்துள்ளதாகவும் கூறி அதிர்ச்சி அளித்தார்.  

தற்போது தன் மகனுக்கு 5 மாதம் ஆகிறது என்று கூறும் அஷ்லே, தங்களின் உறவை எலான் மஸ்க் ரகசியமாக வைத்திருக்க சொன்னதாக கூறினார். அஷ்லேவின் குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தையா என்ற விவாதம் ஒரு பக்கம் எழுந்துள்ள நிலையில் மற்றொரு பரபரப்பு தகவலும் வெளியாகியுள்ளது. 

அதாவது எலான் மஸ்கிற்கு 14வது குழந்தை பிறந்துள்ள செய்து இணையத்தில் வைரலாகி வருகிறது. எலான் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சில்லிஸ் என்பவருடன் உறவில் இருந்து 14வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே எலான் மஸ்க்-ஷிவோன் சில்லிஸ் தம்பதிக்கு 2021ம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். தொடர்ந்து கடந்த ஆண்டு மற்றொரு குழந்தை பிறந்தது. தற்போது இந்த ஜோடி 4வது குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். 

இதையும் படிங்க: எலான் மஸ்க், காஷ் பட்டேல் இடையே லடாய்.! மண்டையை பிய்த்து கொள்ளும் ட்ரம்ப்

இதற்கு முன்னதாக எலான் மஸ்க் தனது முதல் மனைவியான கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன் மூலம் 6 குழந்தைகளுக்கு தந்தையானார். அதில் ஒரு குழந்தை இறந்தது. இவர்கள் மட்டுமின்றி பாடகி இரைம்சூடன் 3 குழந்தைகளுக்கும் தந்தையாகியுள்ளார். 

இதன் மூலம் எலான் மஸ்கின் வாரிசுகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. அஷ்லே குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததாலும், ஏற்கெனவே ஒரு குழந்தை இறந்ததாலும் எலான் மஸ்கின் வாரிசுகளின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக 12 ஆக உள்ளது. தொழில்நுட்பத்தில் விண்ணுலகம் வரை சென்று ஆய்வு செய்து பில்லியனாராக வலம் வரும் எலான் மஸ்க், தனது வாரிசுகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருவதாக கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.

இந்த கருத்துகளுக்கு எல்லாம் சளைத்தவன் நான் இல்லை என்பதை போல் எலான் தனது அடுத்தடுத்த அதிரடி பணிகள் தீவிரம் காட்டி வருகிறார். எனினும் நெட்டிசன்ஸ் எலான் மஸ்கின் வாரிசுகளின் எண்ணிக்கையை கணகிட்டு தங்களுக்குள் விவாதித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: டெஸ்லா காரை நடுத்தர மக்கள் வாங்கவே முடியாதா? வரியைக் குறைத்தாலும் இந்த விலையா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share