×
 

எம்புரான் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட ரஜினிகாந்த்.. மலையாளப் படமா? ஹாலிவுட் படமா என வியப்பு..!

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில் ப்ருத்விராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள எம்புரான் படத்தின் ட்ரெய்லை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

"எனது அருமை நண்பர் மோகன்லால் மற்றும்  பிரித்திவிராஜின்  “எம்புரான்”  பட டிரெய்லரை கண்டு ரசித்தேன், மிக அற்புதமான டிரெய்லர். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற  கடவுள் ஆசிர்வதிக்கட்டும், படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என ட்ரெய்லரை வெளியிட்டதோடு தனது வாழ்த்துச் செய்தியையும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

2019-ல் வெளிவந்த ஹிட் அடித்த லூசிபர் படத்தின் கதையிலிருந்து துவங்குகிறது இந்த எம்புரான் படத்தின் ட்ரெய்லர். ஸ்டீபன் நெடும்பள்ளி என்கிற குரேஷி ஆப்ரஹாம் உண்மையில் யார் என்பதைச் சுற்றி கதை நகர்கிறது. ஒரே ஒரு முறை எம்.எல்.ஏ ஆனாலும், இந்திய அரசியலின் முக்கிய தலைவராகக் கொண்டாடப்படும் ஸ்டீபன்,  எப்படி இவ்வளவு அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் பெறுகிறார்? அவருக்குச் சர்வதேச கடத்தல் குழுவுடன் என்ன தொடர்பு இருக்கிறது? என ட்ரெய்லரில் ரசிகர்களுக்கு சூடு ஏற்றுகிறார் இயக்குநர் ப்ருத்விராஜ்.

இதையும் படிங்க: ரகசியத்தை உடைத்த யுவன் சங்கர் ராஜா.. ஹார்ட் பீட்டை எகிற வைக்க வருகிறது ஸ்வீட் ஹார்ட்..!

மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லால், குரேஷி-ஆப்ரஹாம் என்ற ஸ்டீபன் நெடும்பள்ளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன், சிறப்புத் தோற்றத்தில் ப்ருத்விராஜ், டோவினோ தாமஸ் இணைந்து நடிக்க, மேலும் “Game of Thrones” புகழ் ஜெரோம் ஃப்ளின் இப்படம் மூலம் இந்திய சினிமாவுக்கு அறிமுகமாகிறார். மஞ்சு வாரியர், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.  

“லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக, பான் இந்திய படைப்பாக உருவாகியுள்ள “எம்புரான்” திரைப்படம்,  வரும் 27-ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரும் விரும்பி பார்க்கும் ஐமேக்ஸ் பதிப்பாகவும் எம்புரான் வெளியிடப்படுகிறது. 

ட்ரெய்லரை பார்க்கும்போது இது மலையாளப்படமா? ஹாலிவுட் படமா? என்று வியக்குமளவுக்கு ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் போன்று அட்டகாசமான ஆக்சன் காட்சிகள் வியக்க வைக்கின்றன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் கண்களை விரியச் செய்கிறது. தமிழ்நாட்டின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா தான் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். 

இதையும் படிங்க: இந்தியாவின் முதல் கடல் பேய் படம் "கிங்ஸ்டன்"... ட்ரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share