பஹல்காம் தாக்குதல் எதிரொலி; காஷ்மீர் பண்டிட்களுக்கு மத்திய அரசிடம் இருந்து பறந்த அதிரடி உத்தரவு!
பஹல்காம் தாக்குதலை அடுத்து ஜம்மு - காஷ்மீரில் உள்ள இரண்டு மாவட்டங்களில் உள்ள காஷ்மீர் பண்டிட் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல் நடந்த பஹல்காமில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைசரன், ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் கீழ் வருகிறது. இதையடுத்து அனந்த்நாக் மற்றும் பாரமுல்லா மாவட்டங்கள், காஷ்மீர் பண்டிட் ஊழியர்களை உடனடியாக வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் உள்ள பிரதமர் தொகுப்பு ஊழியர்கள் இந்த வாரம் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் என்று பாரமுல்லாவின் தலைமை கல்வி அதிகாரி (CEO) அறிவித்துள்ளார். காஷ்மீரி பண்டிட் குடியேறிகள் பெரும்பாலும் இந்தத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுடன் தூதரக உறவு உட்பட அனைத்தும் முறிவு... மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப்பின் முடிவு!!
பாரமுல்லாவின் தலைமை கல்வி அதிகாரி இன்று பிறப்பித்த உத்தரவில் “பிரதமர் தொகுப்பு திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து ஊழியர்களும், ஜம்முவைச் சேர்ந்த அனைத்து ஒதுக்கப்பட்ட பிரிவு ஊழியர்களும் ஏப்ரல் 27 வரை உடனடியாக வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரமுல்லாவை அடுத்து அனந்த்நாக் மற்றும் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பண்டிட் ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. "இந்த மாவட்டத்தின் அனைத்து PM Package ஊழியர்களும் 24.04.2025 முதல் மறு உத்தரவு வரும் வரை வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிடப்படுகிறார்கள்" என்று தலைமை கல்வி அதிகாரி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்; தீவிரவாதிகளை இந்தியா வேட்டையாடும்... ராஜ்நாத் சிங் ஆவேசம்!!