கன்ஃபார்ம் டிக்கெட் வைத்திருந்தால் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் அனுமதி: ரயில்வே புது ரூல்ஸ்..!
ரயில் நிலையத்திற்கு வருவதற்கு முன்பே டிக்கெட்டுகள் உறுதி செய்யப்பட்டு முன்பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தியா முழுவதும் உள்ள 60 ரயில் நிலையங்களில் விமான நிலையங்களைப் போன்றே பாதுகாப்பு, கூட்டங்களைக் கட்டுப்படுத்த இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்குப் பிறகு பயணிகள் ரயில் நடைமேடைக்கு வந்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். புதிய விதி அமலுக்கு வந்த பிறகு, பொதுப்பெட்டியில் பயணம் செய்பவர்களும், வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்திருப்பவர்களும் ரயில் நிலையத்திற்குள் நுழைய முடியாது.
கன்பாஃர்ம் (உறுதிப்படுத்தப்பட்ட) டிக்கெட்டுகள் உள்ளவர்கள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். இந்த புதிய விதிமுறை இந்தியா முழுவதும் உள்ள 60 முக்கிய ரயில் நிலையங்களில் இந்தக் கொள்கை செயல்படுத்தப்பட உள்ளது. நெரிசலைத் தடுப்பதற்கும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. முக்கிய நகரங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இந்தக் கொள்கை விரைவில் செயல்படுத்தப்படும்.
இந்திய ரயில் நிலையங்கள் பெரும்பாலும் மிகவும் கூட்டமாக இருக்கும். குறிப்பாக விடுமுறை நாட்கள், பண்டிகைகளின் போது, பலர் உறவினர்களை இறக்கிவிட, வரவேற்க வருகிறார்கள். இந்தப் புதிய விதி தேவையற்ற நெரிசலைக் குறைத்து பயணிகளின் போக்குவரத்தை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதையும் படிங்க: பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்.. இனி கீழ் பெர்த்தில் பயணம் செய்யலாம்.. இந்தியன் ரயில்வே அறிவிப்பு.!
.
புதுடெல்லி ரயில் நிலையம் (டெல்லி), சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (மும்பை), ஹவுரா சந்திப்பு (கொல்கத்தா), சென்னை சென்ட்ரல் (சென்னை) மற்றும் பெங்களூரு நகர ரயில் நிலையம் (பெங்களூரு) உள்ளிட்ட 60 பரபரப்பான ரயில் நிலையங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்த செயல்முறை தற்காலிக அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் இது இறுதியில் பயண அனுபவத்தை மேம்படுத்தும் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள். பயணிகள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து,
இதையும் படிங்க: கும்ப மேளாவுக்கு படையெடுப்பு: கூட்ட நெரிசலில் 18 பேர் பலி... டெல்லியில் நடந்தது என்ன..?