×
 

ஒரே மாதிரியான வாக்காளர் எண் போலி அல்ல - தேர்தல் ஆணையம் விளக்கம்

வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண்கள் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்தின் சதியுடன் பாஜக வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைச் சேர்ப்பதாகக்மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.

பின்னர், ஒரே மாதிரியான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்களைக் கொண்ட மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் பட்டியல்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

இதையும் படிங்க: போலி வாக்காளர்கள் மூலம் மேற்கு வங்கத்தை கைப்பற்ற பாஜக முயற்சிக்கும்- எச்சரித்த மம்தா!

இந்த நிலையில், வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது 

இதுகுறித்து கூறிய தேர்தல் ஆணையம், 

வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல என்றும் சிலரின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவர்களின் பிறந்த தேதி, தொகுதி மற்றும் வாக்குச்சாவடி உள்ளிட்ட பிற விவரங்கள் வேறுபட்டிருக்கும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், எந்தவொரு வாக்காளரும் அவரவருக்கு என ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சில வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் எழுத்துகளுடன் கூடிய எண்களை யூனியன் பிரதேச தலைமைத் தேர்தல் அலுவலர்கள் வழங்கியுள்ளனர். இதனால் அவர்கள் போலி வாக்காளர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் எதிர்காலத்தில் குழப்பங்களை தவிர்ப்ப பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு தனித்துவமான எண்களை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்தப் பணிகளுக்கு உதவ ஈரோநெட் 2.0 வலைதளம் புதுப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுகவில் ஒற்றைத் தலைமை வந்து என்னாச்சு..? பாயிண்டைப் பிடித்த ஓ. பன்னீர்செல்வம்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share