×
 

"லிவ் - இன்" உறவுக்கு அங்கீகாரம் இல்லாவிட்டாலும், சில வழிமுறைகள் அவசியம்" : அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து

திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழும் லிவ்-இன் உறவுக்கு நமது நாட்டில் அங்கீகாரம் இல்லை.

இளைஞர்களுக்கு அதன் மீது அதிக ஈர்ப்பு இருப்பதால், சமூக ஒழுக்கங்களைப் பாதுகாக்க லிவ்-இன் உறவு நிமித்தம் சில வழிமுறைகளை உருவாக்க வேண்டும்’ என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கு ஏற்ப, தற்போதைய சமூகத்தில் ஃப்ரெண்ட் ,காதலன், பெஸ்டி என்பது போன்ற சில உறவு முறைகள் இளம் தலைமுறையினரிடம்  வேகமாக பரவி வருகிறது. 

அதில் ஒன்றுதான், விரும்பியவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் மனைவி போல் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் "லிவ் இன் உறவு முறை ஆகும். ஆனால் இந்த உறவுமுறைக்கு இந்தியாவில் இதுவரை அங்கீகாரம் எதுவும் வழங்கப்படவில்லை.

இதையும் படிங்க: “ஒரு அடி கூட உள்ள வர முடியாது” - திருமாவுக்கு நேரடி சவால்; போலீஸ் வளையத்திற்குள் வேங்கைவயல்! 

வாரணாசியைச் சேர்ந்த ஆகாஷ் கேசரி என்ற இளைஞர் மீது, இந்த உறவுமுறை போல் பெண் ஒருவரை திருமணம் செய்வதாக கூறி, திருமணத்துக்கு முன்பு அவருடன் பாலியல் உறவில் இருந்தகாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. 

இது தொடர்பாக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி ) மற்றும் எஸ்.சி எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 இந்த வழக்கு தொடர்பாக ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையின்போது நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.

நீதிபதி நளின் குமார் ஸ்ரீவஸ்தவா, இந்த வழக்கில் ஆகாஷுக்கு ஜாமீன் வழங்கி அளித்தற் உத்தரவில், “லிவ் - இன் உறவுகளுக்கு நமது சமூகத்தில் அங்கீகாரம் இல்லை. என்றாலும், ஒரு ஆணோ பெண்ணோ தங்களின் இணையர்களுக்கான பொறுப்புக்களில் இருந்து எளிதாக தப்பித்துக் கொள்ள முடியும் என்பதால் அவர்கள் மத்தியில் அத்தகைய உறவுக்கு ஆதரவும், ஈர்ப்பும் அதிகரித்து வருகிறது.

சமூகத்தின் ஒழுக்க விழுமியங்களைக் காப்பாற்றுவதற்காக நாம் அனைவரும் ஒன்றாக கூடி சிந்தித்து இது தொடர்பாக சில கட்டுப்பாடுகளையும், தீர்வினையும் கண்டு பிடிக்க வேண்டிய நேரம் இது.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆகாஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணையின் போது, “அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்தும் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை. அந்தப் பெண் ஒரு மேஜர், இருவரின் சம்மதத்துடன் தான் அவர்களுக்குள் பரஸ்பர உறவு இருந்து வந்துள்ளது.

மேலும் அவர், ஆகாஷூடன் ஆறு ஆண்டுகள் லிவ் இன் உறவில் வாழ்ந்துள்ளார். அந்த காலக்கட்டத்தில் ஆகாஷ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது போல் கருகலைப்பு எதுவும் நடைபெறவில்லை.” என்று தெரிவித்தார். அதற்கான சான்றுகளையும் சமர்ப்பித்தார். 

மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளிக்கவில்லை என்று ஆகாஷின் வழக்கறிஞக் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெகன்மோகனுக்கு கலக்கம்! ஒய்எஸ்ஆர் கட்சி தலைவர் விஜய்சாய் ரெட்டி அரசியலுக்கு திடீர் முழுக்கு, எம்.பி. பதவியிலிருந்தும் விலகல்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share