×
 

காப்பி அடித்ததை கண்டித்ததால் ஆத்திரம்.. ஆசிரியர் காரில் பட்டாசுகளை வீசிய மாணவர்கள்..!

தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஆசிரியர் மீது பட்டாசு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் தற்போது பொது தேர்வுகளில் நடைபெற்று வருகின்றது. என்னடா இது மலப்புறம் மாவட்டம் திருவரங்காடி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், பல்வேறு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு ஒன்றுகூடினர்.

இதனை தொடர்ந்து தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் அவரவர் தேர்வறைக்கு சென்ற ஆசிரியர்களின் அறிவுறுத்தல் படி தேர்வு எழுத தொடங்கினர். அப்போது தேர்வின் நடுவில் மாணவர்கள் சிலர் காப்பி அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. மாணவர்களின் இந்த செயலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் நோட்டமட்டு மாணவர்களை கண்டித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஆசிரியரை பழி வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். தேர்வு முடிந்ததற்கு பின்னர், ஆசிரியரிடம் கையும் களவுமாக மாட்டிய மாணவர்கள் பள்ளியை விட்டு செல்லாமல் அங்கேயே நீண்ட நேரமாக இருந்துள்ளனர்.

இதையும் படிங்க: தந்தை இறந்த துயரிலும்.. தேர்வு எழுத சென்ற 11 வகுப்பு மாணவன்..!

பணிகள் முடிவடைந்த ஆசிரியர் அவரது காரில் பள்ளியிலிருந்து புறப்பட்டுள்ளார். அப்போது காரில் சென்ற ஆசிரியரை வழிமறித்த மாணவர்கள் பட்டாசுகளை பற்றவைத்து காருவை வீசி உள்ளனர். அவை அனைத்தும் பயங்கர சத்தத்துடன் காரில் வெடித்துள்ளது.

 இதில் அதிர்ஷ்டவசமாக ஆசிரியர் காயம் இன்றி உயிர் தப்பினார். இது குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து 100% படிப்பறிவு கொண்ட மாநிலமான கேரளாவில், மாணவர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டு இருப்பது  கவலைக்குரியதாக உள்ளது என்று  வலைதளவாசிகள் வசைபாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தேர்வு நாளில் தந்தையை பறி கொடுத்த மாணவி.. மனதை கரைக்கும் காட்சிகள்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share