×
 

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு; இருவர் காயம் - நடுக்கடலில் இலங்கை கடற்படை அட்டூழியம்!

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக மீனவர்கள் 30 பேரை ஏற்கனவே இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை விடுவிக்கக்கோரியும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை மீட்டுத்தரக்கோரியும் மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை நெடுத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் ஆனந்தவேல் என்பவரது சொந்தமான மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படை ரோந்து வந்துள்ளது. அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாகக்கூறி கைது செய்துள்ளது. 

இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் 10 பேர் கைது; தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்! 

அப்போது கைதுக்கு அஞ்சி தப்ப முயன்ற 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 13 மீனவர்களையும், ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் 10 பேர் கைது; தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share