×
 

தமிழகத்தில் அதிகரிக்கும் மெத்தப்பொட்டமைன் புழக்கம்.. அதிரடி நடவடிக்கைகளால் மாஸ் காட்டும் தமிழக போலீஸ்..!

தமிழ்நாட்டில்  தடை செய்யப்பட்டுள்ள போதை பொருட்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மண்டல காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் திருவல்லிக்கேணி பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனையில் ஈட்டுப்பட்டிருந்த 5 பேரைச் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் வெளிநாட்டை சேந்தவர்களுக்கும் இதில் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

முக்கியமாக இவர்கள் வேறு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கல்வி விசா மூலம் வந்து, போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளதாக சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகச் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் முகமது சொகைல், விக்ணேஷ்வரன், யுவராஜ், பிரிவின், பாலசந்தர் ஆகியோரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் மார்ச் மாதம் 9ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: உயர் ரக போதை பொருள், மதுபானங்கள் விற்பனை.. எஸ்.ஐ மகன் உட்பட 7 பேர் கைது..!

இவர்களிடம் நடத்திய விசாரணையில், பெங்களூருவில் வைத்து கூட்டாளி நிகில் என்பவரை மார்ச் 21-ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் கிறிஸ்டோபர் ஒலுசுக்வா, சமீர் சலா நூரல்தீன், எடிம் ஆண்டிக்கா, எஃபியோங் எடிம், ஷீயு அடேலெக் ஆகிய நைஜிரீயா நாட்டைச் சேர்ந்தவர்களை போலீசார் அதிரடி தேடுதல் வேட்டைநடத்தி கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சையத் அக்சன, தீபக் அந்தோணி ராஜ் ஆகியோரை போலீசார் ஏப்ரல் 3ஆம் தேதி கைது செய்து சிறைக்கு அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 கிராம் மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர்கள் அளித்த தகவலின்படி ஏப்ரல் 8ஆம் தேதி பெங்களூரூவைச் சேர்ந்த கிரன் பனிக்கர் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து ஒரு கிராம் ஹெராயின் மற்றும் 2 கிராம் மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மண்டல காவல் ஆணையர், கடந்த 8 மாதங்களாக பல்வேறு நடவடிக்கைகளைச் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு எடுத்து வருகிறது. தற்போது கைதாகி உள்ள நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள், சூடான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்குப் பிற மாநிலத்திலிருந்து போதைப்பொருள் கிடைக்கிறது. அதனைச் சென்னைக்குக் கடத்தி வந்து சப்ளை செய்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த மாதம் வரை என சுமார் 8 மாதத்தில் போதைப்பொருள் தொடர்பாக 996 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கஞ்சா தொடர்பாக 784 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 8 மாதத்தில் சென்னையில் 21.9 கிலோ மெத்தபெட்டமைனௌ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் 352 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்கை முழுமையாகக் கண்டறிந்து அதனைக் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த கும்பலுக்கு மூளையாக இருந்து செயல்படுவோர்களை முதலில் தேடி வருகின்றோம். நைஜீரியா நாட்டிலிருந்து கூட போதைப்பொருள் நெட்வொர்க் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஞானசேகரனின் தம்பியும் குற்றவாளி தான்.. திருட்டு வழக்கில் கைது செய்த போலிஸ்.. புதுவை போலீசாருக்கு குவியும் பாராட்டு..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share