×
 

அதிகாலையில் அரங்கேறிய சோகம்; திருப்பதி சென்று திரும்பிய 4 தமிழர்கள் உயிரிழப்பு!

திருப்பதியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்து சித்தூர் அருகே விபத்துக்குள்ளானதில் 4 தமிழர்கள் பலியாகினர்.

ஒரு வாரத்திற்கு முன்பு வைகுண்ட ஏகாதசி நாளை முன்னிட்டு திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டிக்கெட்டுகளை வாங்க மக்கள் முண்டியடித்துச் சென்றதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 தமிழர்கள் உட்பட 6 பேர் பலியாகினர். இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் அதிகாலையிலேயே மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பதியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்து சித்தூர் அருகே விபத்துக்குள்ளாகி நான்கு பேர் பலியான நிலையில், 22 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். 

 


திருப்பதியில் இருந்து திருச்சி நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.   சித்தூர் அருகே உள்ள கங்காசாகரத்தில்  சித்தூர் - தச்சூர் நெடுஞ்சாலைக்கான கட்டுமானப் பணிகளுக்காக ஒரு டிப்பர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. இந்த டிப்பர் லாரி இடிப்பதை   தவிர்க்க முயன்ற தனியார் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து  அதிவேகமாக சென்றதால் பஸ் தடுப்புச் சுவரில் மோதி சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. முதற்கட்ட தகவலின் படி இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் மதுரையிலிருந்து தனியார் பேருந்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு திருப்பதி சென்று திரும்பியதாகவும் கூறப்படுகிறது. 

சித்தூர் மாவட்ட கலெக்டர்  சுமித் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டு  காயமடைந்தவர்கள் சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் வேலூர் சிஎம்சி  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் விவரங்களை சேகரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: திருப்பதியில் தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி ..முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென திறக்கப்பட்ட கேட் ..ஆட்சியர் அதிர்ச்சி பேட்டி ..!

இதையும் படிங்க: எச்.எம்.பி.வி வைரஸ் பரவல் எதிரொலி .. திருப்பதியில் மாஸ்க் கட்டாயம் .. தேவஸ்தான அறங்காவலர் குழு அறிவிப்பு ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share