விவசாயம் முதல் விண்வெளி வரை ..2000 பள்ளிகளில் ஆராய்ச்சி கூடம்..மயில்சாமி அண்ணாதுரை பளீச்..!
தமிழகத்தில் அரசுடன் இணைந்து 2000 பள்ளிகளில் விவசாயம் முதல் விண்வெளி வரை என்ற ஆராய்ச்சி கூடம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்...
கோவை, துடியலூர் அருகே உள்ள செவிலியர் கல்லூரியில் மாணவர் மேம்பாடு கருத்தரங்கில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று மாணவர்கள் மேம்பாடு திட்டம் சேவை ஒரு தொழிலாக என்ற தலைப்பில் பேசினார்.அப்போது நான் இஸ்ரோவில் இணைந்துவுடன் செயற்கைக்கோள், சாப்ட்வேர் இரண்டிலும் கவனம் செலுத்தப்பட்டது. நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிய நிலவு முழுவதும் தேட வேண்டும் என நினைத்தோம். நிலவில் இறங்காமல் துருவ பாதையில் சுற்றி வந்து ஆய்வு செய்ய விரும்பினோம். அது மிகவும் சவாலாக இருந்தது. அதற்காக எடுக்கப்பட்ட நான்கு வருட கடும் உழைப்பு பயனாக இந்தியாவின் சந்திராயன்-1 செயற்கைக்கோள் மூலம் நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பது கண்டு அறிந்தோம். நிலவு தொடர்பாக ஆய்வில் மற்ற நாடுகள் பல முறை முயற்சிக்கும் ஒரு விஷயத்தை இந்தியா ஒரே முறையிலேயே சாதித்து உள்ளது. சந்திராயன் வாயிலாக, நிலவில் நீர் இருப்பது கண்ட அறிந்த பின், மற்ற நாடுகள் இதில் மீண்டும் கவனம் செலுத்தி வருகின்றனஎன்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை விண்வெளியில் 2 செயற்கை கோள்களை ஒன்றோடு ஒன்று இணைப்பது சவாலான காரியம் அதை இந்தியா சாதித்து விட்டால் உலகின் 4 வது நாடாக சாதனை பட்டியலில் இடம்பெறும். மேலும் எதிர்காலத்தில் மனிதர்களை விண்ணிற்கு அனுப்புவதற்கும், விண்வெளி மையம் அமைப்பதற்கும், விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கும் இந்த இணைப்பு ஒரு முக்கிய பங்காற்றும். விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கு பதில் நிலவில் விண்வெளி மையம் அமைத்தால் செலவு குறைவாகவும் ஆயுட் காலம் அதிகமாகவும் இருக்கும் என்றார்.
இஸ்ரோ தலைமை பொறுப்பில் தொடர்ந்து தென்னிந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது பற்றி கூறும்போது ஆரம்ப காலகட்டத்தில் தென்னிந்தியர்களே விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆய்வில் அதிகம் பேர் ஈடுபட்டு இருந்தனர். அதனால் தென்னிந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்றார்.கூகுல் மேப் போன்று இந்தியாவிற்கு என தனியாக புவன் என்ற கலன் உள்ளது. அரசு துறைவில் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. அது விரைவில் அனைத்து போன்களில் பயன்படுத்தும் வகையில் வரும் என்றார்.
ஆராய்ச்சி துறையில் பல்வேறு சாதனைகளை அடுத்தடுத்து நிகழப் போகிறது விண்வெளியில் தமது இந்திய பயிர்களை விவசாயம் செய்யும் அளவு விரைவில் உருவாகும். இதன் மூலம் விண்வெளிக்கு செல்வோர் அங்கு பயிர் செய்து உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்.ஏ ஐ தொழில் நுட்பம் படிக்கும் மாணவ - மாணவிகள் அதைப்பற்றி முழுமையாக கற்று அறிந்து அதற்குப் பின் அவற்றின் செயல்பாடு குறித்து ஆராய்ந்து படிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் அரசுடன் இணைந்து 2000 பள்ளிகளில் விவசாயம் முதல் விண்வெளி வரை என்ற ஆராய்ச்சி கூடம் அமைக்க ரூபாய் 500 கோடிகள் ஒதுக்கீடு செய்து விரைந்து செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம் என்றும் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
இதையும் படிங்க: விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதில் இஸ்ரோ சாதனை: 4 நாட்களில் துளிர்த்த காராமணி விதைகள்