×
 

Supreme sacrifice: புலியுடன் கடைசி மூச்சு வரை போராடிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்; உயிரைக் கொடுத்து எஜமானரை காப்பாற்றிய விசுவாசம்

மத்திய பிரதேச மாநிலத்தில் எஜமான் ஒருவர் தான் செல்லமாக வளர்த்து வந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் தனது உயிரைக் கொடுத்து எஜமான் உயிரை காப்பாற்றி இருப்பது உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்து விட்டது. 

வளர்ப்பு பிராணிகளில் நன்றியுள்ளது நாய் என்பார்கள். இதற்கு சிறுவயதில் இருந்து நாம் எத்தனையோ உதாரணங்களை கேள்விப்பட்டு வந்து இருக்கிறோம். ஆனால் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் எஜமான் ஒருவர் தான் செல்லமாக வளர்த்து வந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்.. supreme sacrifice.. என்று நாம் சொல்லக்கூடிய அளவுக்கு தனது உயிரைக் கொடுத்து எஜமான் உயிரை காப்பாற்றி இருப்பது உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்து விட்டது. இந்த செய்தி கிடைத்ததும், வட இந்திய ஆங்கில செய்தி தளம் அனைத்திலும் பார்த்ததில் அனைவருமே மிக அருமையாக இந்த தகவலை கொடுத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் அதை கொடுத்திருந்த விதம் அற்புதம். 

மத்திய பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் புலிகள் சரணாலய பகுதி ஒன்று உள்ளது. அந்தப் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி சிவம். அவர் பத்து ஆண்டுகளாக ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த நாயை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார். பெந்தோ என்று பாசத்துடன்அதற்கு பெயரும் சூட்டியிருந்தார். சிவம் எங்கு சென்றாலும் காலை மற்றும் மாலை நடை பயணங்கள் முதல் இரவு நேரங்களில் வயலில் பயிர்களை காக்கும் வரை அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே செல்லும் பேந்த்தோ. மாநில தலைநகர் போபாலில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பந்தர்கர் புலிகள் சரணாலயத்திற்கு அருகே 250க்கும் குறைவான வீடுகளைக் கொண்ட பர்ஹூட்டில் சிவம் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

அதிகாலை நாலு மணியளவில் காட்டிலிருந்து புலி வெளியே வந்த போது தனது எஜமான் சிவமுடன் வெந்தோ வயல்களை காவல் காத்துக்கொண்டிருந்தது. அப்போது புலி தன்னை நோக்கி வருவதை சிவம் பார்த்து விட்டார். பயந்து போன அவருக்கு கை கால்கள் எல்லாம் விடு வெடு வெடு வென நடுங்கத் தொடங்கிவிட்டது.  ஆனால் அந்த சமயத்தில் பெந்தோ ஒரு சிங்கம் போல் சிலிர்த்து எழுந்தது. ஆவேசமாக குறைத்தபடி பாய்ந்து சென்று புலியை தாக்க தொடங்கியது. உளவியல் தத்துவத்தின் அடிப்படையில் எப்போதுமே முதல் தாக்குதல் அதுவும் பலமாக இருந்தால் எத்தனை பெரிய பலசாலியாக இருந்தாலும் எதிரி ஆடித்தான் போவான் என்பது உண்மைதான்! 

இதையும் படிங்க: முஸ்லிம்களின் அனுதாபியாக மாறிய ஜெலென்ஸ்கி... அமரிக்காவுடன் சேர்ந்து முதுகில் குத்திய சவுதி இளவரசர்..!

ஒரு நிமிடம் நாயின் ஆவேசத்தை பார்த்ததும் புலி திடுக்கிட்டது போல் தோன்றியது. இருந்தாலும் நாயை விட பத்து மடங்கு அதிக எடை கொண்ட அந்தக் காட்டு புலி சுதாரித்துக் கொண்டு அதன் கோரைப்பற்கள் மற்றும் கூறிய நகங்களால் நாயை பல இடங்களில் கடித்து, கிழித்து குதறிவிட்டது. இதுவரை நாம் பார்த்ததே விவசாயி சிவம் நேரில் கண்டதை செய்தியாளரிடம் சொன்னதுதான். இனிதான் இருக்கிறது கிளைமேக்ஸ்! மிகவும் மோசமாக தாக்கப்பட்ட பெந்தோ கால்கள் நடுங்க தனது இடத்தை விட்டு முன்னே நகர முடியாத அளவுக்கு பலவீனம் அடைந்தது. இந்த நேரத்தில் புலி அதன் தாடைகளை செல்ல நாய் பெந்தோவின் கழுத்தில் இறுக்கி அதைகாட்டை நோக்கி இழுத்துச் செல்லத் தொடங்கியது. ஆனாலும் புலி அதன் பிடியை நழுவ விடும் வரை நாய் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டு இருந்ததை பார்த்தார் சிவம். 

ஒரு கட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் பெந்தோ மன உறுதியுடன் நடத்திய எதிர் தாக்குதலை பார்த்து சற்று குழப்பம் அடைந்துவிட்டது புலி. அதுவும் சோர்வடைந்தது போல் தான் காணப்பட்டது. பின்னர் காட்டுக்குள் திரும்பிச் சென்று விட்டது. அதன்பின் சிவம் பெந்தோவை தனது கைகளில் வாரி அணைத்து எடுத்துக்கொண்டு 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  நகரில் இருந்த கால்நடை மருத்துவரிடம் விரைந்தார். பின்னர் நடந்தவற்றை கால்நடை மருத்துவர் அகிலேஷ் சிங் கூறுகிறார், அதிகாலை ஐந்து மணி அளவில் எனது வீட்டு வாசலில் மிகவும் மோசமாக காயமடைந்த ஜெர்மன் ஷெப்பர்ட் ஒருவர் கையில் வைத்திருந்ததை பார்த்தேன்.

இவனை காப்பாற்றுங்க! என் உயிரை காப்பாற்றியவன் இவன் என்று அந்த விவசாயி என்னிடம் கெஞ்சினார். எப்படி இந்த அளவுக்கு மோசமாக  கடிபட்டு இருக்கிறது என்று விவசாயி இடம் கேட்டேன். ஒரு புலியிடமிருந்து என்னை காப்பாற்றிய போது இந்த நிலைமை என்று அந்த விவசாயி விளக்கினார். என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன். ஆனால் அதன் காயங்கள் மிகவும் கடுமையானது புலியின் பற்கள் அதன் கழுத்தில் ஆழமாக சென்று அதன் நகங்கள் நாயைக் கிழித்தெறிந்து இருந்தன. சிறிது நேரத்தில் உயிரைக் கொடுத்து எஜமானதை காப்பாற்றிய பின் இந்த உலகை விட்டு மறைந்து விட்டது பெந்த்தோ"என்ற டாக்டர் அகிலேஷ் சிங்.

உயிருள்ளவரை எனது பெந்தோவுக்கு கடமைப்பட்டு இருக்கிறேன். விவசாயி சிவம் பின்னர் செய்தியாளர்கள் கூறும்போது, "இறுதியில் புலி என் செல்லத்தை விட்டுவிட்டு காட்டுக்குள் திரும்பி மறைந்து போகும் வரை அந்த தள்ளாத நிலையில் வெற்றிபெறும் பெருமிதத்துடன் ஒரு புன்னகையோடு பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருந்தது. ஆனால் எனது செல்ல நாய்க்கு அதுதான் கடைசி தருணம்.. மணிக்கணக்கில் தனது உயிரைப் பிடித்துக் கொண்டு எஜமானரை காக்க அது போராடியது. என் உயிர் உள்ளவரை இதற்காக எனது பெந்தோவுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஜெர்மன் ஷெப்பர்ட் இன நாய்கள் மிகவும் விசுவாசம் மிக்கவை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அந்த விசுவாசம் தனது உயிரையே கொடுக்கும் அளவுக்கு மாபெரும் தியாகமாக அமைந்தது  என்றும் மனதில் இருந்து கொண்டே இருக்கும்" என்று கண்கலங்க கூறி, பேட்டியை முடித்துக் கொண்டார் சிவம். செல்ல நாயின் உயிர் தியாகத்தை அந்த ஊரே பாராட்டியது.

இதையும் படிங்க: கும்பமேளாவில் கடத்தலோ, திருட்டோ இல்லை… ஆனால், மௌனி அமாவாசை அன்று... டிஜிபி கூறிய உண்மை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share