×
 

மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்.. மகளின் கதறலை கேட்டு ஓடி வந்த பெற்றோர்.. அதிர்ச்சி சம்பவம்..!

திண்டுக்கல்லில் கல்லூரி மாணவி குளிக்கும்போது மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி தர்ஷிணி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
அம்மா, அப்பாவுடன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். மாணவியின் பெற்றோர், தங்களது வீட்டிற்கு அருகிலேயே ஒரு வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். அதில் முகமது யூசப் என்னும் வாலிபர் தனது பெற்றோருடன் வாடகைக்கு குடியிருந்தார். 21 வயதான முகமது யூசப், அதே பகுதியில் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். சில தவறான பழக்கங்களால், செல்போனில் ஆபாசமான வீடியோ பார்க்கும் பழக்கத்திற்கு முகமது யூசப் அடிமையானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவி தரிஷிணி தனது வீட்டில் இருந்த குளியலறையில் குளித்துள்ளார். அப்போது அவரது குளியலறையை முகமது யூசப் எட்டிப்பார்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல், மாணவி குளிப்பதை தனது செல்போனில் திருட்டுத்தனமாக படம் பிடித்துள்ளார். குளித்துக்கொண்டிருந்த மாணவி ஏதேச்சையாக ஜன்னல் பக்கம் பார்த்தபோது, யாரோ ஒருவர் செல்போனில் தன்னை படம்பிடிப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே துண்டால் தனது உடலை மூடியபடி, கத்தி கூச்சலிட்டுள்ளார். மாணவி தன்னை கண்டுபிடித்ததை அறிந்த முகமது யூசப் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். அதற்குள் மாணவியின் கூக்குரல் கேட்டு அவரது பெற்றோர் அங்கு ஓடிவந்தனர். அவர்களிடம் மாணவி நடந்ததை சொல்லி அழுதுள்ளார்.

இதையும் படிங்க: போலீஸ் ஸ்டேஷனில் பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு.. நிஜத்தில் நடந்த விடுதலை பட பாணி சம்பவம்..!

உடனே வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த மாணவியின் தந்தை, அங்கிருந்து முகமது யூசப் தப்பி ஓடுவதை கண்டுள்ளார். உடனே அவனை துரத்தி பிடித்து அடித்துள்ளார். முகமது யூசப்பின் பெற்றோர்  வரவே, அவர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். முகமது யூசப்பின் செல்போனை வாங்கி பார்த்தபோது அதில் மாணவியின் வீடியோ இருந்துள்ளது. உடனே முகமது யூசப்பின் பெற்றோரும் அவனை ஆத்திரம் தீர அடித்துள்ளனர்.

பின்னர் மாணவி தரிஷிணியின் பெற்றோர் இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் வீட்டில் பதுங்கி இருந்த வாலிபர் முகமது யூசுப்பை, கைது செய்தனர். விசாரணையில் தனது தவறை முகமது யூசப் ஒப்புக்கொண்டதை அடுத்து திண்டுக்கல் மாவட்ட  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
 

இதையும் படிங்க: அவனை சும்மாவே விடக்கூடாதுடா..! திண்டுக்கல்லில் அரங்கேறிய இரட்டை கொலை.. பாதை மாறிப்போன 2K கிட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share