×
 

‘கூகுள் மேப்’-பை நம்பி மோசம்போன போலீஸார்! நாகாலாந்து சென்றவர்களுக்கு ‘தர்மஅடி’

நாகாலாந்து சென்றவர்களுக்கு ‘தர்மஅடி’ கூகுள் நிறுவனம் உருவாக்கிய கூகுள் மேப் உதவியால் வாகன ஓட்டிகள் உரிய இடத்துக்கு சென்று சேர்வதைவிட, சில நேரங்களில் விபத்துகளில் சிக்குவதும், ஆறு, குளம், பள்ளங்களில் வாகனத்தை விட்டு கவிழ்ப்பதும்தான் நடக்கிறது.

சாதாரண மக்கள்தான் கூகுள் மேப்பால் விபத்தில் சிக்குகிறார்கள் என்றால், போலீஸாருக்கே தவறான வழியை காண்பித்து அவர்களுக்கு தர்மஅடியை வாங்கிக்கொடுத்துள்ளது கூகுள் மேப்.
அசாம் மாநில போலீஸ் அதிகாரிகள் கூகுள் மேப்பை நம்பி வாகனத்தில் பயணித்து, அந்த வரைபடம் அவர்களை நாகாலாந்து எல்லையில் கொண்டு சேர்த்துள்ளது. அங்குள்ள நாகாலாந்து மக்கள், அசாம் போலீஸார் “நன்கு கவனித்து” அனுப்பியுள்ளனர். ஏற்கெனவே நாகாலாந்துக்கும், அசாம் மாநிலத்துக்கும் எல்லைப் பிரச்சினை, இரு மாநில போலீஸாருக்கும் இடையே தகராறு இருக்கும் நிலையில் இப்போது கூகுள் மேப்பை நம்பி சென்ற அசாம் போலீஸ் அதிகாரிகள் தர்மஅடி வாங்கி திரும்பியுள்ளனர்.


அசாம் மாநிலத்தில் ஜோர்கா மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தலைமையில் 16 பேர் கூகுள் மேப் உதவியுடன் வனப்பகுதியில் நேற்று சென்றனர். அவர்கள் வாகனத்தில் இருந்த ஜிபிஎஸ் பழுதானதால், கூகுள் மேப் உதவியுடன் குறிப்பிட்ட இடத்தை தேடி பயணித்துள்ளனர். ஆனால், கூகுள் மேப்பில் போலீஸ்அதிகாரிகள் தேடிய பகுதி முதலில் அசாம் எல்லைக்குள் இருப்பதாகவே காண்பித்துள்ளது. இதனால் கூகுள் மேப் கூறியதை நம்பி போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து பயணித்தனர். ஆனால், கூகுள் மேப் போலீஸாருக்கு தவறான பாதையைக் கூறவே அவர்களும் அது தவறான பாதை எனத் தெரியாமல் பயணித்து, இறுதியாக நாகாலாந்து மாநில எல்லைக்குள் சென்றனர்.


நாகாலாந்து மாநிலத்தின் மோகோசங் மாவட்டப்பகுதிக்குள் 16 போலீஸாரும் நுழைந்தனர். போலீஸாரிடம் ஆயுதங்கள், துப்பாக்கிகள் இருந்ததன. போலீஸார் நுழைந்த பகுதி அடர்ந்த தேயிலைத் தோட்டப்பகுதியாகும்.
போஸீஸாரையும், அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள், துப்பாக்கியைப் பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்து, அவர்களை சுற்றிவளைத்துப் பிடித்து, தர்மஅடிகொடுத்தனர். இதில் போலீஸார் இருவர் காயமடைந்தனர். 
அதன்பின் அங்கிருந்த சிலர் நாகாலாந்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இது குறித்து அறிந்த மோகோசங் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து, அசாம் போலீஸ் அதிகாரிகள் உள்பட 16 பேரை பாதுகாப்பாக மீட்டுச் சென்றார்.  அசாம் போலீஸார் தேடிச் சென்ற பகுதி முதலில் மாநில எல்லைக்குள் இருப்பதாக கூகுள் மேப் காண்பித்துள்ளது. இதை நம்பி பயணித்தபோது, அந்தப் பகுதி, நாகாலாந்து எல்லைக்குள் இருந்தது தெரியவந்தது, ஆனால், கூகுள் மேப் கூறியதை நம்பி பயணித்த போலீஸார் கடைசியில் தர்மஅடிவாங்கி சென்றனர்

இதையும் படிங்க: போதை காளானை மிஞ்சிய குதிரைதாலி..கொடைக்கானலில் போதைக்கு குவியும் இளைஞர்கள்..!

இதையும் படிங்க: அரியலூரில் சாலை வசதி வேண்டும் ..போராட்டத்தில் 5 ஊர் கிராம மக்கள் ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share