×
 

பரீட்சைக்கு நேரமாச்சு.. பேருந்துக்காக காத்திருந்த +2 மாணவி.. நிறுத்தாமல் போன டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே +2 மாணவி, பேருந்துக்காக காந்திருந்த போது பஸ் டிரைவர் பேருந்தை நிறுத்தாமல் சென்ற வீடியோ வைரலானதை அடுத்து பேருந்தின் டிரைவர், கண்டக்டரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் முதல் ஆலங்காயம் வரை அரசு நகரப் பேருந்து சென்று வருகிறது. இந்த பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகள் பஸ் பாஸ் மற்றும் பெண்கள் ஆகியோர்  இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை அந்த அரசு  பேருந்து வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் போது கொத்தக்கோட்டை என்ற இடத்தில் பள்ளி மாணவி ஒருவர்  பேருந்துக்காக காத்திருந்தார்.

அப்போது அங்கு அந்த பேருந்து நிறுத்தத்தில் அரசு நகர பேருந்து நின்றது. ஆனால் அந்த மாணவி பேருந்தில் ஏறுவதற்க்கு முன்பே பேருந்தை ஓட்டுனர் இயங்கி சென்றுள்ளார். அதன் பின்னர் அந்த மாணவி நீண்ட தூரம் பேருந்தின் பின்புறம் ஓடும் பதபதக்க வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த மாணவி பள்ளிக்கு நேரமாக விடும் என்ற அச்சத்தில் அந்த மாணவி பேருந்தின் பின்புறமாக நீண்ட தூரம் ஓடிள்ளார். இதை  பொருட்படுத்தாமல் அந்த அரசு நகர பேருந்து ஓட்டுநர் அலட்சியமாக பேருந்தை இயக்கிச் சென்ற சம்பவம் அரசு நிர்வாகத்தில் அலட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மாணவ மாணவிகளுக்கு இலவசம், பெண்களுக்கு இலவசம் என்று கூறி பேருந்தைதிர்கு பிங்க் நிற அடித்தும்  விளம்பரத்திற்காக  பெயரளவிற்கு மட்டுமே  இயங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் குற்ற சாட்டு தெரிவித்துள்னர். மேலும் அலட்சியமாக பேருந்தை இயங்கி சென்ற  பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளியில் ஆண்டு விழா.. மேடை ஏறிய சரித்திர பதிவேடு குற்றவாளி.. மாணவர்கள் மத்தியில் கஞ்சா பூ பாடல் கேடா?

இந்நிலையில் வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயத்துக்கு அரசு பஸ்ஸை ஓட்டியது டிரைவர் முனிராஜ் என்பது தெரிந்தது. அதேநேரத்தில் முனிராஜ் ஒட்டி வந்த பஸ்சில் ஏறுவதற்காக காத்திருந்த மாணவி பிளஸ் 2 மாணவி என்பதும் தெரிந்தது. பொதுத்தேர்வை தவறவிட்டு விடுவோம் என்ற அச்சத்தில் தான் மாணவி பேருந்தின் பின் உயிரை பணயம் வைத்து ஓடி உள்ளதும் விசாரணையில் தெரிந்தது. பள்ளி மாணவி பஸ்சை பிடிக்க ஓடிச் சென்றதையும், பஸ்சை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டிச் சென்றதையும் அவ்வழியாக சென்ற சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ வைரலானதோடு, கடும் விமர்சனங்களையும் எழுப்பியது. இதையடுத்து, பள்ளி மாணவியை ஓடவிட்ட டிரைவர் முனிராஜை போக்குவரத்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அதே பஸ்சில் இருந்த நடத்துநர் தற்காலிக பணியாளர் என்பதால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் அவரை பணியில் இருந்து விடுவிக்க கோரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காட்டிக்கொடுத்ததால் ஆத்திரம்.. தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு.. கஞ்சா இளைஞர்கள் வெறிச்செயல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share