×
 

தமிழக ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்..! பிரதமரை சந்திக்க திட்டம்..?

திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிகாமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுனர் ரவிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் காலம் தாழ்த்தாமல் முடிவெடுத்திருக்க வேண்டும் என்றும் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்கக்கூடாது என்றும் கூறியது.

அதுமட்டுமல்லாது தனது சிறப்பு அதிகாரம் 142ஐ பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. ஆளுனருக்கு எதிராக உத்தரவு வெளியாகி இருக்கும் சூழ்நிலையில் இந்த தீர்ப்பு அமைந்திருப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுனர் ரவி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தமிழக ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்! பிரதமரை சந்திக்க திட்டம்?

இதையும் படிங்க: விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம்..? தமிழகத்தில் இருந்து யாருக்கு அமைச்சர் பதவி..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share