இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மீதான ‘சஸ்பெண்ட்’... ரத்து செய்தது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்..!
இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த இடைநீக்கத்தை ரத்து செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டது.
உள்நாட்டுப் போட்டிகள், சர்வதேச போட்டிகளுக்கான வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்யலாம் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2023, டிசம்பர் 20ம் தேதி இந்திய மல்யுத்த கூட்டமைப்பு செயல்பாடுகளை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. 15 வயதுக்குட்பட்டவர்கள், 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய சாம்பியன்ஷிப் போட்டியை தன்னிச்சையாக அறிவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழு, மறு அறிவிப்பு வரும் வரை கூட்டமைப்பின் அன்றாட நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதையும் நிர்வகிப்பதையும் தவிர்க்குமாறு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உத்தரவிட்டது. இதையடுத்து, தற்காலிகக் குழுவிற்கு பூபிந்தர் சிங் பஜ்வா தலைமை தாங்கினார், ஹாக்கி ஒலிம்பிக் வீரர் எம்.எம். சோமயா மற்றும் முன்னாள் சர்வதேச ஷட்லர் மஞ்சுஷா கன்வார் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.
இதையும் படிங்க: பச்சையப்பன் கல்லூரிக்கு ஆ. ராசாவை அழைத்த விவகாரம்... பேராசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டது செல்லும்....
ஆனால், மல்யுத்த கூட்டமைப்பில் நிர்வாகக் தோல்விகள், குறைபாடுகள், நிதி மோசடிகள் புதிய குழுவால் ஏற்பட்டதையடுத்து, தேசிய விளையாட்டு மேம்பாட்டு விதிகளை மீறியதாகக் கூறி சஞ்சய் சிங் தலைமையிலான அமைப்பை சஸ்பெண்ட் செய்து விளையாட்டுத்துறை அமைச்சகம் 2023 டிசம்பரில் உத்தரவிட்டது.
ஜூனியர் தேசிய போட்டிகள் 2023ம் ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் குமார் சிங், அறிவித்தார். மல்யுத்த வீரர்களுக்கு தயாராவதற்கு குறைந்தபட்சம் 15 நாள் அறிவிப்பு தேவை என்பதால், இந்த அறிவிப்பு விதிகளை மீறுவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தி இருந்தது.
டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு மல்யுத்த கூட்டமைப்பு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில், நீதிபதிகள் மிகுந்த அதிருப்தி தெரிவித்திருந்தனர். வரும் சர்வதேச போட்டிகளில் இந்தியா சார்பில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும், குறிப்பாக ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வீரர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும். அதற்கு விரைந்து மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
முன்னாள் மல்யுத்த கூட்டமைப்புத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல்கள் செய்தார் எனக் கோரி கடந்த 2023ஆண்டு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்போராட்டம் நடத்தினர். இதையடுத்து 2024ம் ஆண்டில் டெல்லி உயர்நீதிமன்றம் சென்ற வீராங்கனைகள், மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டவிரோதமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் அதை நிறுத்தக் கோரி மனு செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2 கப்பல்கள் பயங்கர மோதல்.. இரு நாட்களாக பற்றி எரியும் தீ.. ஊழியர் மாயம்..புதிய தகவல்கள்..!