#BREAKING குஜராத்தில் ஹெலிகாப்டர் விபத்து - 3 பேர் உயிரிழப்பு!
குஜராத்தில் உள்ள போர்பந்தர் விமான நிலையத்தில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள போர்பந்தர் விமான நிலையத்தில் ‘துருவ்’ என்ற இலகு ரக ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர, பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் சிவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர். விபத்து நடந்த உடனேயே மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
ஹெலிகாப்டர் புறப்படும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, அதன் பிறகு விபத்துக்குள்ளானதாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தின் போது, ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் மற்றும் மூன்று பேர் இருந்தனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். தற்போது விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கடலோர காவல்படை தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இங்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற சம்பவம் நடந்தது. இதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து..! திக்..திக்..திக்.. திட்டமிட்ட கொலையா..! ராணுவம் வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..!
இதையும் படிங்க: மத்திய அரசு அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப்பதிவு: சிபிஐ-க்கு மாநில அரசுகளின் அனுமதி தேவையில்லை; உச்சநீதிமன்றம் அதிரடி