மனைவியுடன் கள்ளத்தொடர்பு..! வாடகைக்கு குடியிருந்தவரை உயிருடன் புதைத்த உரிமையாளர்..!
ஹரியானா மாநிலத்தில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாடகைக்கு குடியிருப்பவரை உரிமையாளர் உயிரோடு புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலம் ரோதக்கில் உள்ள பாபா மஸ்நாத் பல்கலைக்கழகம் அருகே வசித்து வரும் ஹர்திப் என்பவர் தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டுள்ளார். இதில் ஜகதீப் என்பவர் குடியேறி உள்ளார் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் ஹர்திப் மனைவியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். தனது மனைவியை ஜகதீப் தனிமையில் சந்தித்ததை கண்டுபிடித்த ஹர்தீப் மனம் உடைந்துள்ளார்.
இதனையடுத்து யோகா ஆசிரியரை தீர்த்து கட்ட முடிவு செய்த ஹர்தீப், சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு தனது நண்பருடன் தீவிர திட்டம் போட்டு, ஜக்தீப்பை குழி தோண்டி உயிருடன் புதைத்துள்ளார். விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப் போவதாக கூறி பணியாளர்களை அழைத்து வந்து ஏழு அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி வைத்துள்ளார். இதனை அடுத்து ஜக்தீப் கடந்த டிசம்பர் 24-ம் தேதி வேலைக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி ஏழு அடி பள்ளத்தில் தூக்கி வீசி உள்ளார்.
இதையும் படிங்க: இதுக்குதாங்க அமித் ஷாவை சந்தித்தேன்.. எடப்பாடி பழனிசாமி சொல்ல வர்றது என்னன்னா..!!
இதனை அடுத்து யோகா ஆசிரியரை காணவில்லை என்று உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் எந்த ஆதாரங்களும் கிடைக்காததால் அவரது செல்போன் அழைப்பு பதிவுகளை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, சந்தேகத்தின் பேரில் ஹர்தீப்பை பிடித்து போலீசார் விசாரித்ததில் யோகா ஆசிரியர் கை கால்களை கட்டி உயிரோடு புதைத்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் கொலை தொடர்பாக ஹர்தீப் மற்றும் அவரது நண்பர் தரம்பால் என்பவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருவதாக போலீசா தரப்பில் கூறப்பட்டுள்ளது.கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஒருவரை உயிருடன் புதைத்து சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சுங்க சாவடிகளில் உயரும் கட்டணம்.. ஆம்னி பேருந்துகள் சங்கம் கண்டனம்..