×
 

அதையெல்லாம் சொன்னால்… எடப்பாடியாரின் டீமுக்கு ஓ.பி.எஸ் மிரட்டல்..!

உதயகுமார் எப்படி எந்த நிலையில் இருந்தார் என்பதையெல்லாம் நான் கண்கொண்டு பார்த்திருக்கிறேன். அதையெல்லாம் சொன்னால்..?

நிபந்தனையின்றி இணைய விரும்புகிறேன்’ என எனத் தெரிவித்து இருந்தார் ஓ.பி.எஸ்.

அதற்கு பதிலளித்த  எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, ''6 மாதம் அமைதியாக இருந்தால் ஓ.பி.எஸ். நீதிமன்றம் செல்லாமல் இருந்தால் கட்சியில் சேர்ப்பது பற்றி எடப்பாடியிடம் பேசுவேன்'' எனக் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ், “அதிமுகவில் சேர்க்கும்படி நான் யாரிடமும் கேட்கவில்லை.எனக்காக யாரும் பரிந்து பேச தேவையில்லை.அதிமுகவில் இணைக்குமாறு யார் வீட்டு வாசலிலும் நான் போய் நிற்கவில்லை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; அதிமுக ஒன்று சேராமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது. பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் ஒன்று சேர வேண்டும் என்றுதான் கூறினேன். எனக்காக யாரும் பரிந்து பேச தேவையில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியே அடைந்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.

 

பின்னர் ஆர்.பி.உதயகுமார் குறித்து பேசிய அவர்,  டாக்டர் வெங்கடேசன் சோபாவில் அமர்ந்திருக்கும் போது, உதயகுமார் எப்படி எந்த நிலையில் இருந்தார் என்பதையெல்லாம் நான் கண்கொண்டு பார்த்திருக்கிறேன். அதையெல்லாம் சொன்னால்..? அதிமுகவில் டாக்டர்.வெங்கடேசன் பாசறை மாநிலச் செயலாளராக இருந்தார். அப்போது என் மகன் ரவீந்திரநாத்தையும், ஜெயபிரதிப்பையும் அழைத்து, யாராவது ஒருவர் தேனி மாவட்டத்தில் மாவட்ட செயலாளராக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள் எனக் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய்யை பாஜக வளைத்தால்... விஜய்யை மறைமுகமாக எச்சரிக்கும் கே.பி. முனுசாமி..!

என் மகன் என்னிடம் வந்து சொன்னார்கள். அப்படியா என்று கேட்டு நான் டாக்டர்.வெங்கடேசனை சந்திக்கச் சென்றேன். அப்போது வெங்கடேசன் எந்த சோபாவில் உட்கார்ந்து இருந்தார். உதயகுமார் அப்போது எந்த நிலையில் இருந்தார் என்பதை எல்லாம் கண்கூடாக பார்த்திருக்கிறேன். அதைச் சொன்னால் அரசியல் நாகரீகமாக இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் வெங்கடேசன் அவர்களிடம் நான் சொன்னது என்னவென்றால் தயவு செய்து என் மகன்கள் யாரையும் மாவட்ட செயலாளர் பதவிக்கு போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். ஏன் என்று கேட்டார். வாரிசு அரசியல் என்று எதிர்க்கட்சிகள்  சொல்வார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பக்கத்தில் நான் இருப்பதால் வாரிசு என்று சிலர் பிரச்சினைகளை கிளப்புவார்கள். அதனால் வேண்டாம் என்று சொல்லி வந்து விட்டேன்.

மீண்டும் டாக்டர். வெங்கடேசன், அம்மாவிடம் சென்று, 'பன்னீர்செல்வம் அண்ணனின் பிள்ளைகள் யாராவது ஒருவரை மாவட்டச் செயலாளராக நியமிப்பதாகச் சொன்னேன். ஆனால், பன்னீர்செல்வம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்' எனச் சொல்லி இருக்கிறார். 'ஏன் அவர் வேண்டாம் என்று சொல்கிறீர்கள்?  அம்மாவே அனுமதி கொடுத்ததாக டாக்டர் வெங்கடேசன் என்னிடம் சொன்னார். நான் மீண்டும் அம்மாவுடைய அறைக்குச் சென்று சந்திக்கும் பொழுது, ''வெங்கடேசன் அவர்கள் என் மகன்களில் யாராவது ஒருவரை மாவட்ட செயலாளராக போட விரும்புகிறார் என்று சொன்னேன்''.

 அதற்கு அம்மாவோ, வெங்கடேசன் சொல்லவில்லை. நான் தான் சொன்னேன் என்றார். அம்மாவே சொன்ன பிறகு நான் மறுப்பதற்கு இல்லை. அப்படித்தான் அந்தப் பதவி வந்தது. ஆக 2008 ஆம் ஆண்டு காலத்தில் அம்மா அவர்களே நான் தான் ஓ.பன்னீர்செல்வம் மகனுக்கு மாவட்ட செயலாளர் பதவி போடுவதற்கு உத்தரவிட்டேன் என்று சொல்லி இருக்கிறார். உதயகுமார் எப்படி அதிமுகவில் வந்தார் என்பது மதுரையில் வசிக்கிற உங்களுக்கே தெரியும். ஆக, அம்மா அவர்களே உத்தரவு போட்டதற்கு பின்னால் வேறு சிபாரிசு எங்களுக்கு தேவையில்லை. இனிமேல் உதயகுமார் எங்களை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'அதிமுகவில் இணைய வேண்டுமா..? 6 மாதங்கள் அமைதியாக இருங்கள்...' - ஓ.பி.எஸுக்கு நிபந்தனை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share