×
 

வடமாநிலங்களில் அடுத்த 6 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்..! ஐஎம்டி எச்சரிக்கை..!

வடமாநிலங்களில் அடுத்த 6 நாட்களுக்கு வெப்ப அலை வீசும், 42 டிகிரி வரை வெயில் வறுத்தெடுக்கும் என்று ஐஎம்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் வடமாநிலங்களில் அடுத்த 6 நாட்களுக்கு வெயில் வாட்டி எடுக்கும், வெப்ப அலை வீசக்கூடும். வெயிலின் தாக்கம் 42 டிகிரி செல்சியஸ்வரை உயரக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஹரியானாவின் தெற்குப்பகுதி, டெல்லி, உத்தரப்பிரதேசத்தின் மேற்குப்பகுதி, இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசத்தின் மேற்குப் பகுதி ஆகிய மண்டலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளனர்.

இந்தியாவின் மத்திய மற்றும் வடமேற்கு மாநிலங்களில் அடுத்த 6 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் 2 முதல் 4 டிகிரிவரை உயரக்கூடும். டெல்லியில் பகல்நேரத்தில் சில இடங்களில் மட்டும் 42 டிகிரி செல்சியஸ் வரைவெப்பம் சுட்டெறிக்கும் என ஐஎம்டி எச்சரி்த்துள்ளது.

இதையும் படிங்க: 3 நாட்களுக்கு வெய்யிலுக்கு டாடா, bye bye.. கனமழை பெய்வதற்கான மஞ்சள் அலெர்ட்..!

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இந்தியாவில் இயல்புக்கும் அதிகமான வெயில் இருக்கும், இதனால் வெப்பம் சராசரியாக 4 டிகிரிவரை உயரக்கூடும் என இந்திய வானிலை மையம் கடந்த வாரம் எச்சரித்திருந்தது. மத்திய இந்தியா, கிழக்கு மாநிலங்கள், வடமேற்கு மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும். வழக்கமாக ஏப்ரல் முதல் ஜூன்வரை 4 முதல் 7 வெப்பஅலை நாட்கள் இருக்கும். அதுபோல் இந்த முறையும் இருக்கும் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகத்தின் வடக்குப்பகுதி மற்றும் தமிழகத்தில் வழக்கத்தைவிட அதிகமான வெப்ப அலை வரும் நாட்களில் வீசக்கூடும். 

உ.பியின் கிழக்கு மண்டலங்கள், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் பகல் நேரத்தில் 10 முதல் 11 வெப்பஅலை நாட்கள் வரக்கூடும். கடந்த கோடை காலத்தில் இருந்ததைவிட இந்த முறை கடுமையான வெயில் இருக்கும். இந்தியாவில் கடந்த ஆண்டு வெப்ப அலை நாட்கள் இருந்தன, இது இந்தியாவில் அதிக வெப்பமான ஆண்டாக 2024 இருந்தது.

இந்த 2025 ஆண்டில் வெப்ப அலை இந்தியாவில் சில பகுதிகளில் கடந்த பிப்ரவரி 27, 28 தேதிகளில் வந்தது. 2024ல் முதல் வெப்ப அலையே ஏப்ரல் 5ம் தேதிதான் வந்தது. காலநிலை மாற்றத்தால் வெப்ப அலைகள் ஏற்படுவதும், அதி சில நாட்கள் நீடிப்பதும் இயல்பாகி வருகிறது என அறிவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

2022ம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 21ம் நூற்றாண்டில் வெப்ப அலைகள், 10 மடங்கு அதிகரிக்கும் எனத் தெரிவி்த்தது. இந்தியாவில் 70 சதவீதம் பகுதிகள் வெப்ப அலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 2006ம் ஆண்டிலிருந்து 12 வெப்பமான ஆண்டுகள் பட்டியலை எடுத்துப்பார்த்தால் அதில் 2016ம் ஆண்டுதான் அதிக வெப்பமான ஆண்டாக இருந்துள்ளது.


 

இதையும் படிங்க: அடுத்த 3 நாட்களுக்கு அனாவசியமா வெளிய போகாதீங்க.. வெயில் அடி வெளுக்கப்போகுது.. ஜாக்கிரதை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share