இதோ வந்து விட்டார் திமுக ஆட்சியில் காணாமல் போயிருந்த கட்டப்பா… சத்யராஜை உசிப்பிவிட்ட சீமான்..!
அதிமுக ஆட்சியில் எதெற்கெடுத்தாலும் முறுக்கிக் கொண்டு புரட்சி பேசுபவர்கள் யாரும் இப்போது திமுக ஆட்சி குறித்து வாய் திறப்பதில்லை. அதில் முக்கியமாக வாயை மூடிக் கொண்டு இருந்தவர் சத்யராஜ்.
பெரியாருக்கும், திராவிட கருத்தியலுக்கும் எதிராக புலம்புவோர்களை பார்த்து அனுதாபம்தான் தெரிவிக்க முடியும் என்று நடிகர் சத்யராஜ் கூறி வெளியிட்டுள்ள வீடியோ வைரலானலும் அவருக்கு எதிராக கருத்துக்களும் இடமளித்துள்ளது.
வீடியோவிஒல் அவர், "தந்தை பெரியாருடைய திராவிட கருத்தியலின் அடிநாதமான சமூக நீதி கோட்பாட்டை பொது மேடைகளில் விளக்கிச் சொல்லி உண்மையான விளக்கத்தை சொல்லி அதில் என்னென்ன குறைகள் இருக்கிறது, என்னென்ன தகவல்கள் இருக்கிறது, நாங்கள் வந்தால் இதையெல்லாம் மாற்றி காட்டுவோம் என்று பேசுவதில் ஒரு நியாயம் உள்ளது.
ஏதோ அரசியல் செய்தோமே என்பதற்காக புதிது புதிதாக பேசுபவர்களைப் பார்த்தால் கோபம் வரவில்லை பரிதாபமாக இருக்கிறது. பெரியாருக்கு எதிராகவும் திராவிட கருத்தியலுக்கு எதிராகவும் புலம்புவர்களை பார்த்து பரிதாபப்பட்டு அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை மட்டும் தான் தெரிவிக்க முடியும்.
இதையும் படிங்க: நாத்திகனாக மாறியதும் லைஃப் ஜாலியா இருக்கு ..நடிகர் சத்யராஜ் பேச்சு
ஏனென்றால் இந்த கருத்தின் மீது விமர்சனம், தனிமனிதனப் போக்கில் விமர்சனம் இது மட்டும் தான் உள்ளது. கருத்தியலில் விமர்சனம் இல்லை என்பதை இத்தனை கட்சிகள் தெரிவித்துள்ளன.அதனால் அவர்களுக்கு சாதாரண பெரியாரின் தொண்டன் என்ற முறையில் நன்றியை கூறிக்கொண்டு இந்த புலம்பல்களுக்கும் புலம்பும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார். சீமானின் பெயரை சத்யராஜ் நேரடியாகக் குறிப்பிடவில்லை.காரணம் சீமானின் முதல் படமான வீரநடையில் சத்யராஜ்தான் ஹீரோ.அந்த விசுவாசத்தால் தான் சீமான் பெயரை சத்யராஜ் உச்சரிக்கவில்லை என்கிறார்கள் நெட்டிசன்கள்.
அதிமுக ஆட்சியில் எதெற்கெடுத்தாலும் முறுக்கிக் கொண்டு புரட்சி பேசுபவர்கள் யாரும் இப்போது திமுக ஆட்சி குறித்து வாய் திறப்பதில்லை. அதில் முக்கியமாக வாயை மூடிக் கொண்டு இருந்தவர் சத்யராஜ். இதனை மேற்கோள் காட்டி வேங்கைவயல், அண்ணா பல்கலை சம்பவங்கள் நடந்தபோது கட்டப்பாவை காணோம் என்று பலரும் கூறி வந்தனர். இதனை மேற்கோள் காட்டி தனது எக்ஸ் தளப்பதிவில் பகிர்ந்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் இதோ வந்துவிட்டார் புரட்சித்தமிழன்.இதோ வந்துவிட்டார் கட்டப்பா'' என நையாண்டி செய்துள்ளார்.
இதையும் படிங்க: 'அந்த கைத்தடியா..? இந்தத் துப்பாக்கியா..? திராவிட பெரியாரை வீழ்த்தாமல் விடமாட்டேன்..!' மீண்டும் சினம் கொண்டு சீறும் சீமான்..!